முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிறைவு பெற்றது ஊட்டி மலர்க்கண்காட்சி: ஆர்வமுடன் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2024      தமிழகம்
Ooty 2024-05-12-1

Source: provided

ஊட்டி : ஊட்டியில் மலர் கண்காட்சி நேற்று நிறைவு பெற்றதை தொடர்ந்து ஊட்டி ரோஜா பூங்காவில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்து பூக்களை கண்டுகளித்தனர். 

கோடை வாசஸ்தலமான நீலகிரி மாவட்டம் சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக திகழ்கிறது. கோடை சீசனுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக ஊட்டியில் ஆண்டுதோறும் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான மலர் கண்காட்சி கடந்த 10-ம் தேதி தொடங்கியது.

ஊட்டி ரோஜா பூங்காவில் தோட்டக்கலைத் துறை சார்பில் நடைபெற்ற இந்த மலர் கண்காட்சியில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக ரோஜா மலர்களைக் கொண்டு யானை, புறா, புலி உள்ளிட்ட விலங்குகளின் உருவங்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன. இதனை குழந்தைகள் மிகவும் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

இந்நிலையில் நேற்றுடன் ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி நிறைவு பெற்றது. நேற்று காலை நிலவரப்படி, கடந்த 10 நாட்களில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ரோஜா கண்காட்சியை கண்டு ரசித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலையுடன் மலர் கண்காட்சி நிறைவு பெறுவதையொட்டி சுற்றுலா பயணிகள் கண்காட்சியை காண ரோஜா பூங்காவில் நேற்று அதிக அளவில் குவிந்து கண்டுகளித்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து