எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு தினமும் 85 பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) மூலமாக தற்போது கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேற்படி தடங்களில் குறிப்பாக திருவண்ணாமலை செல்லும் பயணிகள் பெரும்பாலானவர்கள் கோயம்பேடு மார்க்கெட் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பணி செய்து வருவதால் அவர்கள் திருவண்ணாமலை தட பஸ்களை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
அதன் அடிப்படையில் வருகிற 23-ம் தேதி முதல் சென்னை கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து திண்டிவனம் செஞ்சி வழியாக 90 பஸ்கள் இயக்கப்பட உள்ளது. மேலும் சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து 44 பஸ்கள் ஆற்காடு, ஆரணி வழியாக இயக்கப்பட உள்ளது. தற்போது தினசரி கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து காஞ்சீபுரம், வந்தவாசி வழியாக இயக்கப்படும் 11 பஸ்களுடன் கூடுதலாக 30 பஸ்களும் இயக்கப்பட உள்ளது. ஆக மொத்தம் 85 பஸ்கள் சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு தினசரி இயக்கப்பட உள்ளது. எனவே, பயணிகள் மேற்படி பஸ் வசதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


