எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
பெங்களூரு : சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 27 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றிபெற்றதுடன், 4-வது அணியாக 'பிளேஆப்' சுற்றுக்கு முன்னேறியது.
14 ஆட்டங்களில்...
17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும், குறிப்பிட்ட 5 அணிக்கு எதிராக 2 முறையும், 4 அணிக்கு எதிராக ஒரு முறையும் என மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.
68-வது லீக் ஆட்டம்...
நடப்பு தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ் ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று விட்டன. மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டன. 'பிளே-ஆப்' சுற்றில் எஞ்சிய ஒரு இடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 68-வது லீக் ஆட்டம் பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்தது.
பீல்டிங் தேர்வு...
சென்னை அணியில் ஒரு மாற்றமாக மொயீன் அலிக்கு பதிலாக மிட்செல் சான்ட்னெர் சேர்க்கப்பட்டார். பெங்களூரு அணியில் நாடு திரும்பிய வில் ஜாக்சுக்கு பதிலாக மேக்ஸ்வெல் இடம் பெற்றார். 'டாஸ்' ஜெயித்த சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட் செய்த பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி, கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் ஆகியோர் களம் இறங்கினர். இருவரும் அதிரடியாக ஆடினார்கள். குறிப்பாக விராட்கோலியின் ஆட்டத்தில் அதிக ஆக்ரோஷம் தெரிந்தது. 3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 31 ரன் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால் சுமார் 40 நிமிட பாதிப்புக்கு பிறகு ஆட்டம் தொடர்ந்தது.
4-வது அரைசதம்...
அதன் பிறகு இருவரும் நிதானமாகவும், நேர்த்தியாகவும் ஆடி ரன்னை உயர்த்தினார்கள். ஸ்கோர் 78 ரன்னை எட்டிய போது (9.4 ஓவரில்) விராட் கோலி 47 ரன்னில் (29 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்) மிட்செல் சான்ட்னெர் பந்து வீச்சில் டேரில் மிட்செலிடம் பவுண்டரி அருகில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து ரஜத் படிதார் களம் புகுந்தார். சிறிது நேரத்தில் 4-வது அரைசதம் அடித்த பிளிஸ்சிஸ் 54 ரன்னில் (39 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) ரன்-அவுட் ஆனார். இதைத்தொடர்ந்து கேமரூன் கிரீன், ரஜத் படிதாருடன் இணைந்தார். வேகமாக மட்டையை சுழற்றிய இருவரும் ரன்வேகத்தை குறையாமல் பார்த்துக் கொண்டனர்.
டோனியிடம் கேட்ச்...
ரஜத் படிதார் 41 ரன்னில் (23 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்) ஷர்துல் தாக்குர் பந்து வீச்சில் டேரில் மிட்செலிடம் பவுண்டரி எல்லையில் கேட்ச் ஆனார். அடுத்து களம் கண்ட தினேஷ் கார்த்திக் 14 ரன்னில் (6 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) துஷர் தேஷ்பாண்டே பந்து வீச்சிலும், மேக்ஸ்வெல் 16 ரன்னில் (5 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஷர்துல் தாக்குர் பந்து வீச்சிலும் டோனியிடம் கேட்ச் ஆனார்கள்.
6-வது முறையாக...
20 ஓவரில் பெங்களூரு அணி 5 விக்கெட்டுக்கு 218 ரன்கள் குவித்தது. இந்த சீசனில் அந்த அணி 6-வது முறையாக 200 ரன்னுக்கு மேலாக எடுத்துள்ளது. 18 ரன்னில் இருக்கையில் கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பிய கேமரூன் கிரீன் 38 ரன்களுடனும் (17 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்), மஹிபால் லோம்ரோர் ரன் ஏதுமின்றியும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். சென்னை அணி தரப்பில் ஷர்துல் தாக்குர் 2 விக்கெட்டும், துஷர் தேஷ்பாண்டே, மிட்செல் சான்ட்னெர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
219 ரன்கள் இலக்கு...
இதனையடுத்து 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் (0) மேக்ஸ்வெல் பந்து வீச்சில் முதல் பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த டேரில் மிட்செல் (4 ரன்) வந்த வேகத்திலேயே வெளியேறினார். இதனால் அந்த அணி 19 ரன்னுக்குள் 2 விக்கெட்டை (2.2 ஓவரில்) இழந்தது. இதைத்தொடர்ந்து ரஹானே, ரச்சின் ரவீந்திராவுடன் சேர்ந்தார். இருவரும் அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஸ்கோர் 85 ரன்னாக உயர்ந்த போது (9.1 ஓவரில்) ரஹானே 33 ரன்னில் (22 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) பெர்குசன் பந்து வீச்சில் பிளிஸ்சிஸ்சிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார்.
பிரமாண்டமான...
அடுத்து ஷிவம் துபே களம் இறங்கினார். முதல் அரைசதம் விளாசிய ரச்சின் ரவீந்திரா 61 ரன்னில் (37 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) ரன்-அவுட் ஆனார். அடுத்த ஓவரில் ஷிவம் துபே (7 ரன்) கேமரூன் கிரீன் பந்து வீச்சில் பெர்குசனிடம் கேட்ச் ஆனார். அடுத்து வந்த மிட்செல் சான்ட்னெர் (3 ரன்) நிலைக்கவில்லை. 7-வது விக்கெட்டுக்கு டோனி, ஜடேஜாவுடன் கைகோர்த்தார். இருவரும் அதிரடியாக ஆடினர். கடைசி ஓவரில் முதல் பந்தில் 110 மீட்டர் தூரத்துக்கு பிரமாண்டமான சிக்சர் விளாசிய டோனி (25 ரன், 13 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) அடுத்த பந்தில் பவுண்டரி எல்லையில் கேட்ச் ஆனார்.
பெங்களூரு வெற்றி...
20 ஓவர்களில் சென்னை அணி 7 விக்கெட்டுக்கு 191 ரன்களே எடுத்தது. இதனால் பெங்களூரு அணி 27 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரவீந்திர ஜடேஜா 42 ரன்களுடனும் (22 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்), ஷர்துல் தாக்குர் ஒரு ரன்னுடனும் களத்தில் இருந்தனர். பெங்களூரு தரப்பில் யாஷ் தயாள் 2 விக்கெட்டும், மேக்ஸ்வெல், முகமது சிராஜ், பெர்குசன், கேமரூன் கிரீன் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 14-வது ஆட்டத்தில் ஆடிய பெங்களூரு அணி 7-வது வெற்றியை பெற்று 14 புள்ளிகளை எட்டியது. அத்துடன் அந்த அணி தொடர்ச்சியாக 6-வது வெற்றியை ருசித்து அசத்தியது. சென்னை அணி 7-வது தோல்வியை சந்தித்து 14 புள்ளிகளிலேயே நீடித்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –25-01-2026
24 Jan 2026 -
துபாய் - சென்னை ஏர் இந்தியா விமான சேவை திடீர் நிறுத்தம்
24 Jan 2026சென்னை, 30 ஆண்டுகளுக்கு மேல் இயக்கப்பட்டு வந்த சென்னை- துபாய் இடையேயான விமான சேவையை நிறுத்துவதாக ‘ஏர் இந்தியா’ நிறுவனம் அறிவித்துள்ளது.
-
ஜெர்மனியில் பனிப்பொழிவால் சாலை விபத்து: 3 பேர் உயிரிழப்பு
24 Jan 2026பெர்லின், ஜெர்மனியில் கடும் பனிப்பொழிவு காரணமாக நிகழ்ந்த சாலை விபத்தில் 3 பேர் பலியானார்கள்.
-
சென்னை மாநகராட்சி ஊழியர்களால் வடிகாலில் கொசுவலை போர்த்திய விவகாரம் குறித்து மேயர் விளக்கம்
24 Jan 2026சென்னை, வடிகாலில் கொசுவலை போர்த்திய விவகாரம் மாநகராட்சி அறிவிப்பாளர் செய்யப்பட்டது இல்லை.
-
அமெரிக்காவில் பனிப்புயல் எச்சரிக்கை: ஜார்ஜியா, மேரிலேண்ட் உள்ளிட்ட 15 மாகாணங்களில் அவசரநிலை
24 Jan 2026ஜார்ஜியா, சுமார் 15 கோடி அமெரிக்க மக்களை பனிப்புயல் தாக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதாக அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
நாளை குடியரசு தின விழா: சென்னையில் டிரோன்கள் பறக்கத் தடை
24 Jan 2026சென்னை, சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி கமிஷனர் அருண் உத்தரவிட்டுள்ள நிலையில் சென்னையில் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு: தேசிய நெடுஞ்சாலைகள் மூடல்
24 Jan 2026ஜம்மு, காஷ்மீரின் பல்வேறு இடங்களில் கடும் பனிப்பொழிவால் பனிக்கட்டிகள் மலைபோல் குவிந்துள்ள நிலையில், தேசிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன.
-
தி.மு.க.வில் இணைகிறாரா..? அமைச்சர் சேகர்பாபு-ஓ.பி.எஸ். திடீர் சந்திப்பு
24 Jan 2026சென்னை, அமைச்சர் சேகர்பாபு - ஓ.பி.எஸ். சந்தித்து பேசியது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
துருக்கியில் நிலநடுக்கம்
24 Jan 2026அங்காரா, துருக்கியின் மேற்கே பலிகேசிர் மாகாணத்தில் சிந்திர்கி மாவட்டத்தில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
16 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அமேசான் நிறுவனம் திட்டம்
24 Jan 2026நியூயார்க், அமேசான் நிறுவனம் தனது நிர்வாகச் செலவுகளைக் குறைக்க வரும் 27ம் தேதி முதல் சுமார் 14,000 முதல் 16,000 வரையிலான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.&
-
விஜய் கை காட்டுபவரே சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையன் பேச்சு
24 Jan 2026சென்னை, தமிழ்நாட்டின் எதிர்கால அரசியல் ஹீரோ விஜய் என்று தெரிவித்துள்ள செங்கோட்டையன், விஜய் கை காட்டுபவரே சட்டமன்ற உறுப்பினர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
-
காவல்துறை வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு எடப்பாடி பழனிசாமி கண்டனம்
24 Jan 2026சென்னை, காவல்துறை வாகனம் மீது வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்திற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவில் உறவினர்கள் மற்றும் மனைவியை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் கைது
24 Jan 2026ஜார்ஜியா, அமெரிக்காவில் மனைவி மற்றும் உறவினர்களை சுட்டுக்கொன்றதாக இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
நேட்டோ குறித்து சர்ச்சை பேச்சு: அதிபர் ட்ரம்ப் மன்னிப்பு கேட்க இங்கிலான்து பிரதமர் வலியுறுத்தல்
24 Jan 2026லண்டன், நேட்டோ குறித்து சர்ச்சை பேச்சுக்கு அதிபர் ட்ரம்ப் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இங்கிலாந்து பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
-
2026ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் இன்று அறிவிப்பு
24 Jan 2026டெல்லி, 2026ம் ஆண்டுக்கான கலை, சமூகம், தொழில் உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக பங்காற்றியவர்களுக்கான பத்ம விருதுகள் இன்று அறிவிக்கப்பட உள்ளது.
-
காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம்: சென்னை ஐகோர்ட்டில் அரசு தகவல்
24 Jan 2026சென்னை, காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறுவது தொடர்பான வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது.
-
இந்தோனேசியாவில் நிலச்சரிவு: 8 பேர் பலி
24 Jan 2026ஜகார்த்தா, இந்தோனேசியாவில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பலியானார்கள். 82 பேர் மாயமாகியுள்ளனர்.
-
வழிபாட்டு தல கட்டிடங்களுக்கு கலெக்டரின் அனுமதி தேவையில்லை என்ற அரசாணைக்கு ஐகோர்ட் தடை
24 Jan 2026மதுரை, வழிபாட்டு தல கட்டிடங்களுக்கு கலெக்டரின் முன் அனுமதி சான்று பெற தேவையில்லை என்ற அரசாணைக்கு தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
டெல்லியில் ரோஜ்கார் மேளா: 61 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் வழங்கினார்
24 Jan 2026புதுடெல்லி, தலைநகர் டெல்லியில் நடந்த ரோஜ்கார் மேளாவில் 61 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி வழங்கினார்.
-
நாளை குடியரசு தின விழா: நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி உரை
24 Jan 2026புதுடெல்லி, குடியரசு தின விழாவை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு இன்று ஜனாதிபதி திரெளபதி முர்மு உரையாற்றுகிறார்.
-
வருமானத்தை மறைத்ததற்காக அபராதம்: விஜய் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் தீர்ப்பு தள்ளிவைப்பு
24 Jan 2026சென்னை, வருமானத்தை மறைத்ததற்காக ரூ.1.50 கோடி அபராதம் விதித்ததை எதிர்த்து விஜய் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
வார ராசிபலன்
24 Jan 2026


