முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி.யில் ஸ்மிருதி இரானி உள்ளிட்ட 5 மத்திய அமைச்சர்களின் விதியை முடிவு செய்யும் இன்றைய தேர்தல்

ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2024      இந்தியா
Smriti-Irani 2023 06 13

Source: provided

லக்னோ : உத்தர பிரதேசத்தில் 14 இடங்களுக்கான மக்களவைத் தேர்தலின் 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு மே 20 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் 5 மத்திய அமைச்சர்களின் தலைவிதியை தீர்மானிக்கும் தேர்தலாக உள்ளது.

இங்குள்ள 14 தொகுதிகளில் காங்கிரஸின் கோட்டைகளாக கருதப்படும் ரேபரேலி மற்றும் அமேதி மட்டுமின்றி, பாஜக ஹிந்துத்துவ அடையாளமாக முன்னிறுத்தப்படும் அயோத்தியும் அடங்கும். இந்த 5-வது கட்ட தேர்தல் பூர்வாஞ்சலின் 27 தொகுதிகளிலும், பந்தேல்கண்டின் நான்கு தொகுதிகளிலும் நடைபெறும் ஆறாவது மற்றும் ஏழாவது கட்ட தேர்தல்களை முடிவுசெய்யும் வகையில் இருக்கிறது. இது பாஜக மூன்றாவது முறையாக வெற்றி பெறுமா அல்லது மாற்றம் ஏற்படுமா என்பதை தீர்மானிக்கும்.

2019-ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் இந்த 14 இடங்களில் 13-ல் வெற்றி பெற்றது. காங்கிரஸின் அப்போதைய தலைவர் ராகுல் காந்தியை பாஜகவின் ஸ்மிருதி இரானி தோற்கடித்த நிலையில் காங்கிரஸிடம் இருந்து அமேதியை பாஜக கைப்பற்றியது. இந்த நிலையில், சோனியா காந்தி 2019-ல் ரேபரேலியை மட்டுமே தக்கவைத்துக் கொண்டார். 2019 மற்றும் 2014 ல் சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை.

இந்த தேர்தலில் காங்கிரஸ் இரண்டு இடங்களிலும், கூட்டணி கட்சியான சமாஜ்வாடி மீதமுள்ள 12 இடங்களிலும் போட்டியிடுகின்றன. ஐந்தாவது கட்டத்தின் மிக முக்கியமான தொகுதிகளில் ஒன்றான ரேபரேலியில் ராகுல் காந்திக்கும், பாஜக எம்எல்சியும், யோகி ஆதித்யநாத்தின் அமைச்சருமான தினேஷ் பிரதாப் சிங்கிற்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தினேஷ் பிரதாப் சிங் 2018 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பகுஜன் சமாஜ் பிற பிற்படுத்தப்பட்ட ஒருவரை வேட்பாளராக நிறுத்தியுள்ளது

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கும், 40 ஆண்டுகளாக காங்கிரஸ் குடும்பத்தின் பிரதிநிதியான உள்ள கே.எல்.சர்மாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. 2019 ஆம் ஆண்டு அமேதியில் ராகுல் காந்தியை தோற்கடித்த ஸ்மிருதி, இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார். பகுஜன் சமாஜ் கட்சி நன்ஹே சிங் சௌகானை வேட்பாளராக நிறுத்தியுள்ளது.

அயோத்தி ராமர் கோயில் அமைந்துள்ள பைசாபாத் மக்களவைத் தொகுதியில் பாஜகவின் ஹிந்துத்துவ பலத்தை சோதிக்கும் வகையில் இந்தத் தேர்தல் அமைந்துள்ளது. இருப்பினும், பைசாபாத் பாஜகவின் கோட்டையாக இருந்ததில்லை. 2009-ல் காங்கிரஸும், 2004ல் பகுஜன் சமாஜ் கட்சியும், 1998ல் சமாஜ்வாடியும் வெற்றி பெற்றன. 1991, 1996, 2014 மற்றும் 2019ல் பாஜக வெற்றி பெற்றது. 2019-ல், ஐந்து முறை எம்எல்ஏவாகவும், இரண்டு முறை எம்பியாகவும் இருந்த பாஜகவின் லல்லு சிங்,சமாஜ்வாடியின் ஆனந்த் சென்னை தோற்கடித்து தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டார். இந்த முறை சமாஜ்வாடி 9 முறை எம்எல்ஏவாக இருந்த அவதேஷ் பிரசாத்தையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அரவிந்த் சேனாவையும், பகுஜன் சமாஜ்வாடி சச்சிதானந்த பாண்டேவையும் ஆகியோரை களமிறங்கியுள்ளதால் பலமுனை போட்டிநிலவுகிறது.

1991 முதல் 2004 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து ஐந்து முறை மக்களவையில் லக்னௌவை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பாரம்பரியத்தை முன்னோக்கி கொண்டு செல்லும் எம்பி ராஜ்நாத் சிங் மூன்றாவது முறையாக மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது பாஜகவின் உண்மையான சவாலாக இருக்கிறது. பாஜகவின் கோட்டையான லக்னௌவில் 1991க்கு பின் அக்கட்சி தோற்றதேயில்லை.2014, 2019 தேர்தலில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இங்கே வெற்றி பெற்றிருந்தார். லக்னௌவை ஒட்டியுள்ள இந்த இரண்டு தனித் தொகுதிகளின் வெற்றிகள் பாசி சமூகத்தினரின் கைகளில் உள்ளன.

பாஜக வேட்பாளரும், மத்திய இணை அமைச்சருமான கௌஷல் கிஷோர் தொடர்ந்து மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். அவருக்கு சவாலாக சமாஜ்வாதி கட்சியின் ஆர்.கே.சௌத்ரியும், பகுஜன் சமாஜ் கட்சியின் ராஜேஷ் குமாரும் உள்ளனர். க்னௌவை ஒட்டிய இந்த தொகுதி ஒவ்வொரு முறையும் வெற்றியாளர்களை மாற்றியுள்ளது. இருப்பினும், பாஜக 2014 இல் வெற்றி பெற்று 2019-யிலும் தக்கவைத்துக் கொண்டது. தலித்துகள் மத்தியில் பாசி சமூகத்தினரும், ஓபிசிகளில் குர்மி சமூக வாக்காளர்களும் தொகுதியில் முக்கியமானவர்கள். 20% க்கும் அதிகமான முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர்.இந்த முறை பாஜக அதன் எம்பி உபேந்திர சிங் ராவத்துக்கு பதிலாக ராஜ்ராணி ராவத்தை நிறுத்தியுள்ளது. காங்கிரஸ் தலைவரான பி.எல். புனியாவின் மகன் தனுஜ் புனியாவை அக்கட்சி நிறுத்தியுள்ளது.

அரச குடும்பத்தைச் சேர்ந்த பாஜக எம்பி கீர்த்தி வர்தன் சிங் தொடர்ந்து மூன்றாவது முறையாக களத்தில் உள்ளார். அவரை எதிர்த்து சமாஜ்வாதி கட்சியின் முக்கியஸ்தர் பேணி பிரசாத் வர்மாவின் பேத்தி ஸ்ரேயா வர்மாவும், பகுஜன் சமாஜின் சௌவுரப் மிஸ்ராவும் போட்டியிடுகின்றனர். 2019 இல் சமாஜ்வாடி- பகுஜன் கட்சி கூட்டணி வேட்பாளரான சுக் லால் வர்மாவை தோற்கடித்த சாத்வி நிரஞ்சன் ஜோதியயே பாஜக மீண்டும் நிறுத்தியுள்ளது. குர்மி சமூகத்தினர் அதிகம் வாழும் இந்த தொகுதியில் சமாஜ்வாடி கட்சி அதன் மாநிலத் தலைவரான நரேஷ் உத்தமை நிறுத்தியுள்ளது. பகுஜன் சமாஜ் சார்பில் மணீஷ் சச்சன் போட்டியிடுகிறார்.

பிரஜ்பூஷண் சரண் சிங்கின் மகன் கரண் பூஷன் சிங்கை பாஜக வேட்பாளராக நிறுத்தியுள்ளது. சமாஜ்வாடி கட்சி சார்பில் பகத்ரம் மிஸ்ராவையும், பகுஜன் சமாஜ் கட்சி பிராமணரான நரேந்திர பாண்டேவை களமிறக்கி போட்டியை சுவாரஸ்யமாக்கியுள்ளது. தனித்தொகுதியான கோசாம்பியில் பாஜக எம்பி வினோத் சோங்கருக்கும், சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏ இந்திரஜித் சரோஜின் மகனும், வயதில் மிகவும் இளையவரான புஷ்பேந்திர சரோஜுக்கும் இடையே சுவாரசியமான போட்டி நிலவுகிறது. இங்கே, ஜலான், ஜான்சி, ஹமிர்பூர் மற்றும் பண்டா உள்ளிட்ட நான்கு மக்களவைத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து