முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆருத்ரா பண மோசடி வழக்கு: தலைமறைவாக இருந்த இயக்குநர் ஒருவர் கைது

திங்கட்கிழமை, 20 மே 2024      தமிழகம்
Arudra 2024-05-20

Source: provided

சென்னை : ஆருத்ரா நிறுவன பண மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த நிறுவன இயக்குநர்களில் ஒருவரை தமிழக பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை அமைந்தகரையை தலைமையிடமாகக் கொண்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்ட் டிரேடிங் பிரைவேட் லிமிடெட் எனும் நிறுவனம் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.36,000 வட்டியாக வழங்ப்படும் என விளம்பரம் செய்தது. இதை நம்பி பலர் முதலீடு செய்த நிலையில் அந்நிறுவனம் பண மோசடியில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது.

அதன்பேரில், 21 பேர் மீது பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சுமார் ரூ.2,438 கோடி மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, அந்நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான ரூசோ உள்பட 10-க்கும் மேற்பட்டோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த ரூசோ தலைமறைவானார். அவர் வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் அனைத்து விமான நிலையங்களுக்கும் போலீசார் ‘லுக் அவுட்’ நோட்டீஸ் வழங்கியிருந்தனர்.

மேலும், நிறுவனத்துக்கு சொந்தமான வங்கிக் கணக்குகளில் இருந்த ரூ.96 கோடி பணம் முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தலைமறைவாக இருந்த ரூசோவை பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து