முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் பலத்த மழை: திருவனந்தபுரம், கொச்சியில் சாலைகள் துண்டிப்பு

திங்கட்கிழமை, 20 மே 2024      இந்தியா
Rain-Kochi-2024-05-20

திருவனந்தபுரம், கேரளாவில் பெய்து வரும் பலத்த மழையால் திருவனந்தபுரம், கொச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பல சாலைகள் துண்டிக்கப்பட்டன.

கேரளாவில் கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம் உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது. திருவனந்தபுரத்தில் மார்க்கெட் பகுதியில் பல வணிக நிறுவனங்களில் மழை நீர் புகுந்தது. தாழ்வான வீடுகளில் மழை நீர் புகுந்துள்ளது. மலை அடிவாரங்களில் நிலச்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர்.

பல ஏரிகள் நிறைந்து சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆலப்புழாவில் பல பகுதிகள் தண்ணீரால் சூழ்ந்தன. இன்னும் வரும் சில நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை தெரிவிக்கிறது. இது போல் பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து