முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுக்கோட்டை அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் பலி : முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

திங்கட்கிழமை, 20 மே 2024      தமிழகம்
Fireworks 2023 07 25

Source: provided

புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உரிமையாளர் பலியானார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அத்திப்பள்ளம் என்ற கிராமத்தில் வேல்முருகன் என்பவர் சொந்தமாக அனுமதி வாங்கி பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். அந்த பட்டாசு ஆலையின் பின்புறம் பட்டாசு குடோன் உள்ளது.

இந்த குடோனை விரிவாக்கம் செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தகர சீட் போடுவதற்காக வெல்டிங் வைத்த போது அதிலிருந்து பரவிய தீப்பொறி அருகில் இருந்த பட்டாசு குடோனில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளின் மீது பரவி தீ விபத்து ஏற்பட்டது. இதனால் குடோனுக்கு உள்ளே இருந்த பட்டாசுகள் அனைத்தும் வெடித்து சிதற தொடங்கின. அப்போது உரிமையாளர் வேல்முருகனின் தம்பி கார்த்திக் மற்றும் தொழிலாளிகள் சிலர் உள்ளே இருந்தனர். பட்டாசுகள் அடுத்தடுத்து வெடித்து சிதறியதால், கடை உள்ளே சிக்கிய கார்த்திக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த மற்றொரு தொழிலாளி திருச்சி மாவட்டம் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இது குறித்து அறிந்த விராலிமலை தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று தீயை முழுமையாக கட்டுப்படுத்தினர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த விராலிமலை போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பட்டாசு ஆலை உரிய அனுமதி பெற்று இயங்கியது தெரியவந்தது. 

இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. பட்டாசு குடோனில் தீ விபத்து ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த விபத்து குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியதாவது-

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், வானதிராயன்பட்டி கிராமம், அத்திப்பள்ளம் என்ற இடத்தில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு கிடங்கில் நேற்று (20-ந் தேதி) பிற்பகல் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், அத்திப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக்ராஜா (27) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். மேலும், இந்த விபத்தில் பலத்த காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிவநேசன் (27) என்பவருக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். உயிரிழந்தவரின் குடும்பத்திற்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், காயமடைந்து பாதிக்கப்பட்டவருக்கும் தேவையான அரசு நிவாரண உதவிகள் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து