முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கையில் இருந்து அகமதாபாத் வந்த நான்கு ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் கைது

திங்கட்கிழமை, 20 மே 2024      இந்தியா
Jail

Source: provided

அகமதாபாத் : இலங்கையில் இருந்து அகமதாபாத் விமான நிலையம் வந்த ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்த 4 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

அகமதாபாத் விமான நிலையத்துக்கு கடந்த 12-ம் தேதி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருந்தார். இதையடுத்து விமான நிலையம் முழுவதும் தீவிர சோதனையிடப்பட்ட நிலையில், வெடிபொருள்கள் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை.

வெடிகுண்டு மிரட்டலின் பின்னணி குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்த நிலையில், இலங்கையிலிருந்து அகமதாபாத் வந்தடைந்த விமானம் ஒன்றில், ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய 4 பேர் பயணித்துள்ளதை குஜராத் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. 

இதைத் தொடர்ந்து, இலங்கையில் இருந்து குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்தில் வந்திறங்கிய ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய 4 பேர், நேற்று (மே 20) குஜராத் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கைதான 4 பேரும் பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ்.(இஸ்லாமிக் சொசைட்டி)ய உடன் தொடர்புடையவர்கள் என்றும், அவர்கள் 4 பேரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்றும் பாகிஸ்தானில் அவர்களது அமைப்பினரிடமிருந்து அடுத்த கட்ட தகவலுக்காக காத்திருந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களது புகைப்படங்களை தீவிரவாத தடுப்பு பிரிவினர் வெளியிட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள தீவிரவாதிகளை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து