முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரான் அதிபர் இறுதிச்சடங்கில் துணை ஜனாதிபதி பங்கேற்பு

செவ்வாய்க்கிழமை, 21 மே 2024      இந்தியா
jagdeepdhankhar-2023-05-05

Source: provided

புதுடெல்லி : இப்ராஹிம் ரைசி இறுதிச்சடங்கில்  துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் கடந்த 19-ம் தேதி  மாயமானது. பின்னர் விபத்தில் ஹெலிகாப்டர் சிக்கியது உறுதி செய்யப்பட்டது. இந்த விபத்தில் இப்ராஹிம் ரைசி, ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி மற்றும் முக்கிய அதிகாரிகள் உயிரிழந்தனர். 

நேற்று முன்தினம் இப்ராஹிம் ரைசி உடல் கண்டெடுக்கப்பட்டது. இப்ராஹிம் ரைசி மறைவுக்கு இந்தியா ஒருநாள் துக்கம் அனுசரிப்பதாக தெரிவித்திருந்தது. இந்திய தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது.  

இந்த நிலையில் இப்ராஹிம் ரைசி இறுதிச்சடங்கில்  துணை ஜனாதிபதி ஜெக்தீப் தன்கர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவர் இன்று ஈரான் புறப்பட வாய்ப்புள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து