முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் மறுப்பு: ஜாமின் கோரிய மனுவை திரும்ப பெற்றார் சோரன்

புதன்கிழமை, 22 மே 2024      இந்தியா
Supreme-Court 2023-04-06

புது டெல்லி, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் இடைக்கால ஜாமின் கோரிய மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளதை தொடர்ந்து  ஜாமின் மனுவை அவர் திரும்பப் பெற்றார்.

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரன் ஜனவரி 31-ம் தேதி கைது செய்யப்பட்டார். நிலமோசடி தொடர்பான வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டதை அடுத்து, முதல்வர் பதவியில் இருந்து அவர் விலகினார்.

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனுவை, ஜார்க்கண்ட் ஐகோர்ட், கடந்த சில தினங்களுக்கு முன் நிராகரித்தது. இதனையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 

இந்த நிலையில் ஹேமந்த் சோரன் இடைக்கால ஜாமின் கோரிய மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து ஜாமின் மனுவை ஹேமந்த் சோரன் திரும்பப் பெற்றார். 

தேர்தல் பிரச்சாரம் செய்ய, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால ஜாமின் வழங்கியது போல், சோரனுக்கும் ஜாமின் கிடைக்கும் என அவரது தரப்பினர் எதிர்பார்த்து காத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து