முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி ஜெனிரோ அருங்காட்சியகத்தில் கொரியாவின் பாரம்பரிய ஆடையில் அலங்கரிக்கப்பட்ட மீட்பர் இயேசு சிலை

ஞாயிற்றுக்கிழமை, 9 ஜூன் 2024      உலகம்
Brazil 2024-05-09

Source: provided

பிரேசிலியா : பிரேசிலில் டி ஜெனிரோ அருங்காட்சியகத்தில் மீட்பர் இயேசு கிறிஸ்துவின் சிலை கொரியாவின் பாரம்பரிய ஆடையால் வண்ண விளக்குகள் மூலம் அலங்கரிக்கப்பட்டுள்ளது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் வருகிற நவம்பர் மாதம் ஜி-20 உச்சிமாநாடு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அங்கு மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் லைட்ஸ் ஆப் கொரியா என்ற கண்காட்சியின் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பிரேசிலின் புகழ்பெற்ற கிறிஸ்ட் தி ரிடீமர் எனப்படும் மீட்பர் இயேசு கிறிஸ்துவின் சிலை கொரியாவின் பாரம்பரிய ஆடையால் வண்ண விளக்குகள் மூலம் அலங்கரிக்கப்பட்டது. இதனை ஏராளமானோர் கண்டுகளித்தனர். 

இந்த வண்ண விளக்குகள் தென் கொரிய ஆடை வடிவமைப்பாளர் ஜின் ஹீ லீயால் திட்டமிடப்பட்டது. இந்த இயேசு கிறிஸ்துவின் சிலை மற்றொரு நாட்டின் பாரம்பரிய ஆடையில் அலங்கரிக்கப்படுவது இதுவே முதன்முறை ஆகும். 

இது இரு நாடுகள் இடையேயான உறவில் உள்ள நெருக்கத்தை காட்டுகிறது. கடந்த 1931-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட மீட்பர் இயேசு சிலையானது 98 அடி(30 மீட்டர்) உயரம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து