எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
கயானா: டி-20 உலகக்கோப்பை தொடரில் அகேல் ஹொசைன் அபார பந்துவீச்சில் உகாண்டாவை வெறும் 39 ரன்களில் சுருட்டியது மே.இ.தீவுகள் அணி.
174 ரன்கள் இலக்கு...
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கயானாவில் நடைபெற்ற 18-வது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ், உகாண்டா அணிகள் மோதின. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 173 ரன்கள் குவித்தது. ஜான்சன் சார்லஸ் 44 ரன்னும், ரசல் 130 ரன்னும் எடுத்தனர். தொடர்ந்து, 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய உகாண்டா அணிக்கு ஆரம்பம் முதலே அதிர்ச்சியாக அமைந்தது. வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
39 ரன்னுக்கு அவுட்...
இறுதியில், உகாண்டா அணி 12 ஓவரில் 39 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 134 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் 5 விக்கெட் வீழ்த்திய அகேல் ஹொசைனுக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது. இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது.
வலுப்படுத்த....
தோல்வி குறித்து உகாண்டா அணியின் கேப்டன் தெரிவித்ததாவது., “இந்த நாள் எங்களுக்கு கடினமானதாக அமைந்தது. பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை. இந்த தோல்வி எங்களுக்கு பாடமாக அமைந்துள்ளது. பேட்டிங் யூனிட்டாக நாங்கள் என்ன செய்திருக்க வேண்டும் என்ற புரிதலை பெறுவது அவசியம். எங்கள் அணியின் பந்து வீச்சு நம்பிக்கை தரும் வகையில் அமைந்தது. அதனை நாங்கள் வலுப்படுத்த வேண்டும். அது கொஞ்சம் சவாலான காரியம் தான். நாங்கள் விளையாட்டில் சிறந்து விளங்க வலுவான அணிகளுடன் விளையாட வேண்டியது அவசியம். இதனை நாங்கள் இந்த தொடரில் பெற்றுள்ளோம். எங்கள் அணியின் ரசிகர்களை நேசிக்கிறோம். அனைத்து நேரத்திலும் அவர்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள்” என உகாண்டா கேப்டன் பிரையன் மசாபா தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


