முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குவைத் தீ விபத்து: உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 5 லட்சம்: கேரள அரசு நிதியுதவி அறிவிப்பு

வியாழக்கிழமை, 13 ஜூன் 2024      இந்தியா
Kerala-Assembly

திருவனந்தபுரம், குவைத் நாட்டின் மங்காப் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில்  கேரளாவை சேர்ந்த 19  பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது. 

குவைத் நாட்டின் மங்காப் நகரில் தொழிலாளர்கள் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தீ விபத்தில் இந்தியர்கள் உள்பட 49 பேர் பலியாகியுள்ளனர். 

மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

எனவே பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. உயிரிழந்தவர்களில் 42 பேர் இந்தியர்கள் என குவைத் அரசு உறுதிப்படுத்தி உள்ளது. 

இந்நிலையில், அவர்களில் 19 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் என கேரள அமைச்சரவை தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் கேரள அரசு அச்சம் தெரிவித்துள்ளது. 

மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. ஒரு லட்சமும் நிவாரண நிதியுதவி வழங்கப்படும் என்றும் கேரள அரசு அறிவித்துள்ளது.

இதனிடையே, கேரளாவை சேர்ந்த 2 முக்கிய தொழிலதிபர்களான யூசுப் அலி மற்றும் ரவி பிள்ளை ஆகியோரும் நிவாரண உதவி அளிக்க முன் வந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் வழங்கப்படும் என்று யூசுப் அலியும், ரூ. 2 லட்சமும் வழங்கப்படும் என்று ரவி பிள்ளையும் தெரிவித்துள்ளனர். 

இதன் மூலம், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மொத்த இழப்பீடாக தலா ரூ. 12 லட்சம் வழங்கப்படும் என்று கேரள அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

இந்த தீ விபத்து தொடர்பாக கேரள முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், இறந்தவர்களின் உடல்களை கொண்டு வருவதற்கான முயற்சிகளை ஒருங்கிணைக்க மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜை உடனடியாக குவைத்துக்கு அனுப்ப முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து