எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் தொடரபட்ட வழக்கினை தொடர்ந்து கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1,563 மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என்றும் அந்த தேர்வுக்கான தேதி அறிவித்தும் சுப்ரீம் கோர்ட்டில் தேசிய தேர்வு முகமை பதிலளித்துள்ளது.
மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு கடந்த மே 5-ம் தேதி நடந்தது. இதில் 23 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். இதற்கிடையே நீட் தேர்வில் சுமார் 1500 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்களை தேசிய தேர்வு முகமை வழங்கியது.
தேர்வு நேரத்தில் சில நிமிடங்கள் ஏதேனும் காரணங்களால் எதிர்பாராமல் விரயமானால் அதற்கு ஈடாக கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் சில மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது.
இதற்காக விண்ணப்பித்திருந்த மாணவர்களுக்கு மட்டும் அத்தகைய சலுகை வழங்கப்பட்டது என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்தது. இதை எதிர்த்து 20 ஆயிரம் மாணவர்களிடம் கையொப்பம் பெற்று பிசிக்ஸ் வாலா என்ற கல்வி தொழில்நுட்ப நிறுவன தலைவர் அலக் பாண்டே சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
அதில் 1500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தேசிய தேர்வு முகமை தன்னிச்சையாக 70 முதல் 80 மதிப்பெண்கள் வரை கருணை மதிப்பெண் என்ற பெயரில் கூடுதல் மதிப்பெண் வழங்கியுள்ளது. இந்த விவகாரத்தை தெளிவுப்படுத்தும் வரை இளநிலை மருத்துவ கலந்தாய்வுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் விக்ரம்நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய விடுமுறை கால அமர்வு முன்பு நேற்று நடந்தது. அப்போது சுப்ரீம் கோர்ட்டில் தேசிய தேர்வு முகமை தரப்பில் கூறும் போது,
கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட 1,563 மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும். அவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்குவதற்கான முடிவை திரும்ப பெறுகிறோம். அந்த மாணவர்களுக்கு வரும் 23-ம் தேதி மறுதேர்வு நடத்தப்படும். அதன்படி முடிவுகள் வரும் 30-ம் தேதி அறிவிக்கப்படும்.
தேர்வு எழுத விரும்புவோர் எழுதலாம். தேர்வு எழுதாத மாணவர்களுக்கு பழைய மதிப்பெண்ணே தொடரும். மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்களை சேர்க்காத உண்மையான மதிப்பெண்கள் தெரிவிக்கப்படும்.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., இதர படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு ஜூலை 6-ம் தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து நீட் மறுதேர்வு நடத்தும் தேசிய தேர்வு முகமையின் முடிவை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் அதற்கு அனுமதி அளித்தனர்.
தேசிய தேர்வு முகமையின் விளக்கத்தை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக் கொண்டது. மேலும் கலந்தாய்வு பாதிக்கப்படாத வாறு நீட் மறுதேர்வு விரைவாக நடத்தி முடிவுகளை வெளியிட வேண்டும்.
கருணை மதிப்பெண்களை தவிர்க்க மனுதாரர்கள் எழுப்பியுள்ள பிற கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று தேசிய தேர்வு முகமைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கில் மருத்துவ கலந்தாய்வு நடத்த தடை விதிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். நீட் தேர்வு குளறுபடி, வினாத்தாள் கசிவு, இந்த ஆண்டுக்கான நீட் தேர்வை ரத்து செய்ய கோரும் மனு உள்பட நீட் தொடர்பாக அனைத்து மனுக்களும் ஜூலை 8-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
நீட் தேர்வு குளறுபடி தொடர்பாக நேற்று முன்தினம் நடந்த வழக்கு விசாரணையின் போது, நீட் தேர்வின் புனிதத் தன்மை பாதிக்கப்பட்டு உள்ளது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு பிறகு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாவது:-
நீட் வினாத்தாள் கசிந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை. தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. தேசிய தேர்வு முகமை நம்பகமான அமைப்பாகும்.
இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து வருகிறது. அதன் தீர்ப்புக்கு நாங்கள் கட்டுப்படுவோம். எந்த ஒரு மாணவரும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
சபாகர் துறைமுக திட்டத்துக்கு இந்தியா நிதியை ஒதுக்கீடு செய்யாதது ஏமாற்றம்: ஈரான் அமைச்சர் அப்பாஸ்
26 Feb 2026தெஹ்ரான், சபாகர் துறைமுக திட்டத்துக்கு இந்தியா, இந்த ஆண்டு பட்ஜெட்டில் நிதி ஒதுக்காதது ஏமாற்றமளிப்பதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
-
8-ம் வகுப்பு புத்தகத்தில் 'நீதித் துறையில் ஊழல்': சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியிடம் மன்னிப்பு கோரியது என்.சி.இ.ஆா்.டி.
26 Feb 2026புதுடெல்லி, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (என்.சி.இ.ஆா்.டி.) 8-ஆம் வகுப்பு புதிய சமூக அறிவியல் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள 'நீதித் துறையில் ஊழல்' என்
-
72 குண்டுகள் முழங்க இ. கம்யூ., கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடலுக்கு அரசு சார்பில் மரியாதை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வீர வணக்கம்
26 Feb 2026சென்னை, மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடலுக்கு 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு சார்பில் முழு மரியாதை செலுத்தப்பட்டது.
-
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ. 215.79 கோடியில் 65 முடிவுற்ற பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
26 Feb 2026சென்னை, ரூ.215.79 கோடியில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் முடிவுற்ற பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
அ.தி.மு.க.வில் கிடைக்கும் மரியாதை வேறு எந்தக் கட்சியிலும் கிடைக்காது முன்னாள் அமைச்சர் வேலுமணி பேச்சு
26 Feb 2026கோவை, அ.தி.மு.க.வில் இருந்து த.வெ.க.வுக்குச் சென்றவர்கள் மீண்டும் அ.தி.மு.க.வுக்கு வருவதற்கு தயாராக இருக்கிறார்கள்.
-
நல்லகண்ணுக்கு பாரத ரத்னா வழங்க மத்திய அரசிடம் பரிந்துரைப்பேன்: மத்திய அமைச்சர் எல். முருகன் தகவல்
26 Feb 2026சென்னை, நல்லகண்ணுக்கு பாரத ரத்னா விருது கிடைக்க மத்திய அரசிடம் பரிந்துரைப்பேன் என்று மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
-
கட்சி 'ரோடு ஷோ' விதிகளுக்கு எதிராக வழக்கு: த.வெ.க.வுக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி
26 Feb 2026சென்னை, கட்சி ரோடு ஷோக்களுக்கான அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை ரத்து செய்யக் கோரி த.வெ.க.
-
இன்ஸ்டாவில் 10 கோடி பின்தொடர்பாளர்கள்: முதல் உலகத்தலைவராக பிரதமர் மோடி சாதனை..!
26 Feb 2026புதுடெல்லி, இன்ஸ்டாகிராமில் 10 கோடி பின்தொடர்பாளர்களை கடந்த முதல் உலகத் தலைவர் என்ற சாதனையைப் பிரதமர் நரேந்திர மோடி படைத்துள்ளார்.
-
நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து ஆய்வு: சென்னையில் 3 நாட்கள் முகாமிடும் இ.டி. தலைமை இயக்குநர் ராகுல்..!
26 Feb 2026சென்னை, சென்னைக்கு அமலாக்கத்துறையின் தலைமை இயக்குநர் ராகுல் நவீன் வருகை தந்துள்ளார்.
-
விரைவல் 2,700 உதவி பேராசிரியர்கள் தேர்வு: 9646 கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் சம்பளம் உயர்வு: அமைச்சர் கோவி.செழியன் தகவல்
26 Feb 2026சென்னை, 2700 உதவி பேராசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் கவுரவ விரிவுரையாளர்கள் 9646 பேருக்கு மாதம் ரூ.5 ஆயிரம் சம்பளம் உயர்த்தி வழங்கப்படும் என்று அமைச்சர் கோ
-
உதய்ப்பூரில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா திருமணம் கோலாகலம்.!
26 Feb 2026உதய்ப்பூர், தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கும் நேஷனல் கிரஷ் என்று வர்ணிக்கப்படும் ராஷ்மிகா மந்தனாவுக்கும் நேற்று காலை திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.
-
திராவிட கட்சிகளுடன் தான் கூட்டணி: பிப்.28-க்குள் கூட்டணி தொடர்பாக அறிவிப்பு: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தகவல்
26 Feb 2026சென்னை, திராவிட கட்சிகளுடன் தான் கூட்டணி என்றும் பிப்.28-க்குள் கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றும் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
-
பிரதமர் நரேந்திர மோடியை இந்திய உடையில் வரவேற்ற நெதன்யாகு
26 Feb 2026டெல் அவிவ், இந்திய பாரம்பரிய உடையணிந்து மோடியை வரவேற்று அவரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு.
-
சிக்கிமில் தொடர் நிலநடுக்கம்
26 Feb 2026காங்டாக், சிக்கிம் மாநிலத்தில், அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டிருப்பது பதிவாகியுள்ளது. இதனால் மக்கள் பீதியடைந்தனர்.
-
தங்கத்தின் விலை சற்று சரிவு
26 Feb 2026சென்னை, கடந்த 3 நாள்களில் பவுனுக்கு ரூ.2,000 உயா்ந்த நிலையில் வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 360-க்கு விற்பனையானது.
-
ரயில் பயணங்களின்போது செல்போனில் அதிக சத்தத்துடன் பாடல் கேட்டால் இனி அபராதம்: இந்திய ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை
26 Feb 2026சென்னை, ரயில் பயணங்களில் அதிக சத்தத்துடன் பாடல் கேட்டால் அபராதம் மற்றும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
கற்பனை உலகில் வாழும் பாகிஸ்தான்: ஐ.நா. கூட்டத்தில் இந்தியா குற்றச்சாட்டு
26 Feb 2026ஜெனீவா, ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்ற ஐநா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில், பாகிஸ்தானை இந்தியா கடுமையாக சாடியுள்ளது.
-
ரஷ்ய பெண்களுடன் உறவு: உண்மையை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்ட பில்கேட்ஸ்
26 Feb 2026வாஷிங்டன், ரஷ்ய பெண்களுடன் தனக்கு இரண்டு உறவுகள் இருந்ததாக ஒப்புக் கொண்ட பில் கேட்ஸ், அந்த உறவுகள் எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையது இல்லை என்றும் தெரிவித
-
இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி
26 Feb 2026டெல் அவீவ், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாட்டின் உயரிய விருதைப் பெற்ற ஒரே தலைவர் என்ற பெருமையை பிரதமர் நரேந்திர மோடி பெற்றுள்ளார்.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
26 Feb 2026- திருக்கோஷ்டியூர் செளமிய நாராயணப் பெருமாள் ஆண்டாள் சன்னதியில் மால ைமாற்றுதல், தங்க தோலுக்கினியானில் பவனி.
- பெருவயல் முருகப்பெருமான் சண்முக உற்சவம்.
- மதுரை கூடலழகர் காலை ஏணிக்
-
இன்றைய நாள் எப்படி?
26 Feb 2026


