முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீட் நுழைவு தேர்வு வினாத்தாள் கசிந்ததற்கான ஆதாரம் இல்லை மத்திய அமைச்சர் விளக்கம்

வியாழக்கிழமை, 13 ஜூன் 2024      இந்தியா
NEET 2024-05-04

Source: provided

புதுடெல்லி: மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வில் வினாத் தாள் கசிந்ததாக எழுந்த குற்றச்சாட்டை நிராகரித்த மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், அதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில், “தேசிய தேர்வு முகமை மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. அது மிகவும் நம்பகமான அமைப்பாகும். நீட் தேர்வில் வினாத் தாள் கசிந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் விசாரித்து வருகிறது. அதன் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம். எந்த ஒரு மாணவரும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வோம்” என்றார்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மற்றும் பிற படிப்புகளில் சேர 1,563 நீட் 2024 தேர்வர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்குவதற்கான முடிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், ஜூன் 23 ஆம் தேதி மீண்டும் தேர்வு நடத்தப்படும் என்றும் சுப்ரீம் கோர்ட்டில் தேசிய தேர்வு முகமை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. இந்தத் தேர்வர்கள் மறுதேர்வை எழுத விரும்பவில்லை என்றால், அவர்களின் முந்தைய மதிப்பெண்கள், கருணை மதிப்பெண்கள் இல்லாமல் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து