முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மொபைல் எண்களுக்கு தனி கட்டணம் வசூலா? - வதந்தி என டிராய் விளக்கம்

வெள்ளிக்கிழமை, 14 ஜூன் 2024      இந்தியா
Mobile-Phone

Source: provided

புதுடெல்லி : மொபைல் எண்களுக்கு தனி கட்டணம் செலுத்தும் முறையை அமல் படுத்தபடும் என்ற செய்தி பரவிவந்த நிலையில் அது வதந்தி என்று டிராய் முற்றுபுள்ளி வைத்துள்ளது.

மத்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் இனி மொபைல் எண்களுக்கு தனி கட்டணம் செலுத்தும் முறையை அமல் படுத்தபடும் என்ற செய்தி பரவி வந்தது இந்த திட்டத்தின் மூலம் நாம் பயன்படுத்தும் மொபைல் மற்றும் லேண்ட்லைன் எண்களுக்கான கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்ட உள்ளது. மேலும் இது ஒரு முறை அல்லது வருடாந்திர கட்டணமாகவும் அல்லது பிரீமியம் எண்களுக்கு ஏலம் விடுவது போன்ற முறைகளாகவும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டும், மேலும் இந்த திட்டமானது தொலைதொடர்பு நிறுவனங்கள் மூலம் வசூலிக்கபட உள்ளதாக தொடர்ந்து செய்திகள் பரவி வந்தது.

இந்நிலையில் வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில் ட்ரை நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது, பல சிம்கள் மற்றும் தனி சிம்கள் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு  டிராய் மூலம் கட்டணம் விதிக்கப்படும் என்ற செய்தி தவறானது. இத்தைய ஆதாரமற்ற மற்றும் பொதுமக்களை தவறாக வழிநடத்த மட்டுமே உதவுகிறது. இது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து