எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, தமிழிசை குறித்து அவதூறாக பேசிய தி.மு.க. பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழிசை குறித்து அவதூறாக பேசிய தி.மு.க. பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-நாய் வாலை நிமிர்த்த முடியாது என்ற ஒரு பழமொழி உண்டு. சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அப்படித்தான். அவர் மீண்டும் மீண்டும் பெண்களை புண்படுத்தும் வகையில் அவதூறாக பேசி வருகிறார். குறிப்பிட்ட இடைவெளியில் அவர்களை மகிழ்விக்க இப்படிப்பட்ட நோயுற்ற மனப்பான்மை கொண்டவர்கள் தேவைப்படுவதால், அவரைத் திரும்ப அழைத்துக் கொள்வதற்காகவே முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரை 'சஸ்பெண்ட்' செய்துள்ளார்.
தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக, நான் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக வழக்கு தொடருவேன். மேலும் பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்ற கடுமையான பாடத்தை அவர் கற்பதை உறுதி செய்வேன். மீண்டும் நான் சொல்கிறேன். அவரைப் போன்ற ஆண்கள் அவர்கள் வளர்ப்பையே காட்டுகிறார்கள் மற்றும் தங்கள் குடும்பத்தில் உள்ள பெண்களின் அவலத்தை காட்டுகிறார்கள்.
அக்கா தமிழிசை சவுந்தரராஜன் பா.ஜ.க.வின் மிகவும் மரியாதைக்குரிய உறுப்பினராக இருக்கிறார். மேலும் எங்கள் பா.ஜ.க. குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினராலும் மதிக்கப்படுகிறார். அறிவாலயத்தின் அலமாரியில் எலும்புக்கூடுகள் விழ ஆரம்பித்தால், இந்த முட்டாள்களுக்கு தங்கள் அசிங்கமான முகங்களை எங்கு மறைப்பது என்று தெரியாது. பெண்களை அவதூறு செய்வதில் தி.மு.க.வுக்கு நீண்ட வரலாறு உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


