முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக எம்.பி.க்களின் குரல் இனி பார்லி.யில் வலுவாக இருக்கும் : கோவை விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சனிக்கிழமை, 15 ஜூன் 2024      தமிழகம்
CM-1 2024-05-15

Source: provided

கோவை :  பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்களின் குரல் இனி வலுவாக இருக்கும் என்று கோவையில் நடைபெற்ற தி.மு.க. முப்பெரும் விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,  2026 சட்டசபை தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி வெல்லும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளையும் கைப்பற்றி அபார வெற்றிபெற்றது. 40 தொகுதிகளிலும் வெற்றியளித்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாக தி.மு.க. முப்பெரும் விழா கோவை கொடிசியா மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, பாராளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றி சாதாரண வெற்றியல்ல, வரலாற்று வெற்றி. பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்களின் குரல் இனி வலுவாக இருக்கும். அரசியலமைப்பு சட்டத்தை பா.ஜ.க. மாற்றவிடாமல் நமது 40 எம்.பி.க்கள் அரணாக செயல்பட வேண்டும். கூட்டணி கட்சிகள்தான் நமது கட்சியின் அச்சாணி. வாக்களித்த மக்களுக்கு எம்.பி.க்கள் உண்மையாக இருக்க வேண்டும். கூட்டணி தலைவர்களுடன் இருப்பது தேர்தல் உறவு அல்ல, கொள்கை உறவு.

பா.ஜ.க. 240 தொகுதிகளில் மட்டுமே வென்றது மோடியின் தோல்வி. தான் நினைத்ததையெல்லாம் இனி பாராளுமன்றத்தில் பா.ஜ.க.வால் நிறைவேற்ற முடியாது. சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமாரால்தான் மோடி பிரதமராக முடிந்தது. 2026 சட்டமன்ற தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெறுவோம். விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் திமுக வேட்பாளர்தான் வெற்றிபெறப்போகிறார். தொடர் வெற்றி தொடர்ந்து உழைக்க வேண்டும் என்ற ஊக்கத்தை அளிக்கிறது. எங்களை நம்பி பொறுப்பு வழங்கிய மக்களின் நம்பிக்கை ஒருபோதும் வீண்போகாது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து