முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வைகோவுக்கு வயது 28-ஆ 82 வயதா? முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆச்சரியம்

வெள்ளிக்கிழமை, 2 ஜனவரி 2026      தமிழகம்
Stalin 2024-12-21

திருச்சி, ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோவுக்கு இப்போது 82 வயதா? அல்லது 28 வயதா என்று எனக்கு சந்தேகம் வருகிறது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

திருச்சியில் இருந்து மதுரைக்கு வைகோ மேற்கொள்ளும் சமத்துவ நடைப்பயணத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்து உரையாற்றினார். விழாவில் பேசிய வைகோ, திராவிட இயக்கத்தின் முத்திரையாகப் பதிந்திருப்பவர் முதல்வர் ஸ்டாலின், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மாபெரும் வெற்றியை பெறப்போகிறார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.

சாதி, மதத்தின் பெயரால் இங்கு கலவரம் உருவாக்க தில்லி ஏகாதிபத்தியத்தின் அடிவருடிகள் துடிக்கிறார்கள். சங்க காலத்தில் சாதிகள் கிடையாது. சாதிகள் அற்ற தமிழ் சமுதாயமாகவே இருந்தது. ஆனால் தற்போது மதத்தின் பெயரால் இங்கு மக்களுக்கு இடையே பிரிவினையை தூண்டப் பார்க்கிறார்கள். ஏகாதிபத்தியத்துக்கும் ஜனநாயகத்துக்கும் நடக்கும் சண்டைதான் சட்டப்பேரவைத் தேர்தல் என்று வைகோ கூறினார்.

தொடர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், ம.தி.மு.க. தலைவர் வைகோவின் நெஞ்சுரம், வேகத்தைப் பார்க்கும் போது அவருக்கு 82 வயதா அல்லது 28 வயதா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. அவரது காலடி படாத இடமே இல்லை எனும் அளவுக்கு மக்கள் பிரச்னைக்காக நடைப்பயணம் செய்தவர் வைகோ. திராவிட பல்கலைக்கழகத்தில் படித்தவர் வைகோ. அதே பல்கலையில்தான் நானும் பயின்றேன். தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு, பெண்களுக்கு கல்வி உள்பட உரிமைகள் கிடைக்க போராடியவர் பெரியார். கருணாநிதியுடன் அருகில் இருந்து பாடங்களைக் கற்றவர் வைகோ. வைகோவின் சமத்துவ நடைபயணம் வெற்றி பெற வாழ்த்துகள். முதுமையை முற்றிலும் தூக்கியெறிந்துவிட்டு நடைப்பயணம் மேற்கொள்கிறார் வைகோ என்று முதல்வர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து