முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அகற்ற வேண்டும்: எலான் மஸ்க் கருத்து

ஞாயிற்றுக்கிழமை, 16 ஜூன் 2024      உலகம்
Elon-Musk 2023 03 28

Source: provided

வாஷிங்டன் : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அகற்ற வேண்டும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். 

அமெரிக்காவில் இந்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அதிபர் தேர்தலில் போட்டியிடுவர்களுக்கான முதன்மை தேர்தல்  தற்போது நடைபெற்று வருகிறது. இந்த  முதன்மை தேர்தலில் ஏற்பட்ட வாக்குப் பதிவு முறைகேடுகள் குறித்து சுயேச்சை அதிபர் வேட்பாளரான ராபர்ட் எப் கென்னடி ஜூனியர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 

இது தொடர்பான டுவிட்டர் பதிவில், போர்ட்டோ ரிக்கோவில் நடைபெற்ற முதன்மைத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பான நூற்றுக்கணக்கான முறைகேடுகள் கண்டறியப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

அதிர்ஷ்டவசமாக, ஆவணங்கள் இருந்ததால், சிக்கல் கண்டறியப்பட்டு வாக்கு எண்ணிக்கை சரி செய்யப்பட்டது. ஒருவேளை ஆவணங்கள் இல்லையென்றால் நீதிமன்றத்தில் என்ன நடக்கும்? என்று கூறியிருந்தார். 

அவரது இந்த பதிவில் கருத்து கூறியுள்ள  எலான் மஸ்க், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அகற்ற வேண்டும். மனிதர்கள் அல்லது ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் அவை ஹேக் செய்யப்படுவதற்கான ஆபத்து சிறியதாக இருந்தாலும், மிக அதிகமாகவே உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து