முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை-இந்தியா இடையே பாலம்: இறுதிக்கட்டத்தில் ஆய்வுப் பணிகள்; அதிபர் ரணில் விக்ரமசிங்கே தகவல்

திங்கட்கிழமை, 17 ஜூன் 2024      உலகம்
Ranil 2023-06-05

கொழும்பு, இலங்கை-இந்தியா இடையே தரைவழி இணைப்பை ஏற்படுத்தும் திட்டத்துக்கான ஆய்வுப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். 

சுற்றுலாவையும், பொருளாதாரத்தையும் ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.   அந்த வகையில் தமிழ்நாட்டின் தனுஷ்கோடி மற்றும் இலங்கையின் தலைமன்னார் இடையே கடலில் 23 கி.மீ. தொலைவுக்கு பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.  இந்த நிலையில்,  இலங்கை-இந்தியா இடையே தரைவழி இணைப்பை ஏற்படுத்தும் திட்டத்துக்கான ஆய்வுப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வடகிழக்கு மாவட்டமான மன்னாரில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்வதற்காக,  அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கே  அங்கு சென்றிருந்தார்.  அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  “இலங்கை-இந்தியா இடையே தரைவழி இணைப்பை ஏற்படுத்தும் திட்டத்துக்கான ஆய்வுப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.  இப்பணிகள் விரைவில் நிறைவடையும்” என்றார்.

அண்மையில் டெல்லியில் நடைபெற்ற பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க பங்கேற்றார்.   இதனிடையே, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வரும் 20ம் தேதி இலங்கை வரவிருப்பதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதேநேரம், இந்திய வெளியுறவு அமைச்சகம் தரப்பில் இதுவரை அதிகாரபூர்வ தகவல் வெளியிடப்படவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து