எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லண்டன், தம் மனைவி விவாகரத்து கோருவதற்கு ஆப்பிள் நிறுவனம்தான் காரணம் என்று கூறி வழக்கு தொடுத்துள்ளார் இங்கிலாந்தைச் சேர்ந்த தொழிலதிபர் ரிச்சர்ட்.
தமது ஐஃபோன்வழி பாலியல் தொழிலாளர்களுக்குக் குறுந்தகவல் அனுப்பி, சந்திப்புகளுக்கு ஏற்பாடு செய்து வந்த அந்த அவர், குறுந்தகவல்கள் அனைத்தையும் கைப்பேசியிலிருந்து நீக்கிவிட்டார். ஆனால், அவரது ஐஃபோனுடன் இணைக்கப்பட்ட ஐமேக் கணினியில் அந்த நீக்கப்பட்ட குறுந்தகவல்கள் இருந்தது.
குடும்பத்தில் அனைவரும் பயன்படுத்தும் அந்த ஐமேக்கில் செயலி ஒன்றை இயக்கிய ரிச்சர்ட் மனைவி, தம் கணவர் கடைசியாக ஒரு பாலியல் தொழிலாளருக்குக் குறுந்தகவல் அனுப்பி இருந்ததைக் கண்டுபிடித்தார். அவர் மேலும் ஆழமாக ஆராய்ந்ததில் பல ஆண்டுகளாகத் தம் கணவர் அனுப்பி, பின்னர் நீக்கிய குறுந்தகவல்கள் அனைத்தையும் பார்த்துவிட்டார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ரிச்சர்ட் மனைவி விவாகரத்து கோரினார்.
இந்நிலையில் அந்த தொழிலதிபர், ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளார். ஒரு ஐஃபோனிலிருந்து நீக்கப்படும் குறுந்தகவல்கள், அதனுடன் இணைக்கப்பட்டுள்ள மற்ற ஆப்பிள் சாதனங்களில் தொடர்ந்து இருக்கலாம் என்பதை நிறுவனம் தன் வாடிக்கையாளர்களுக்குத் தெளிவுபடுத்தவில்லை என்பது இவரது வாதம். ஆதலால் அவர் சுமார் 5 மில்லியன் பவுண்ட் (ரூ. 53 கோடி) நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


