முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் வழக்கு: விசாரணைக்கு சி.ஐ.டி. போலீசார் முன்பு ஆஜர் ஆனார் எடியூரப்பா

திங்கட்கிழமை, 17 ஜூன் 2024      இந்தியா
Yediyurappa

பெங்களூரு, சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் வழக்கு தொடர்பாக சி.ஐ.டி. போலீசார் முன்பு விசாரணைக்கு எடியூரப்பா நேற்று ஆஜர் ஆனார்.

பெங்களூருவை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த மார்ச் மாதம் பெங்களூரு சதாசிவநகர் போலீஸ் நிலையத்தில் ஒரு பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்தார். அதில், முன்னாள் முதல்-அமைச்சர் எடியூரப்பாவை தனது 16 வயது மகளுடன் நேரில் சந்தித்து உதவி கேட்டபோது, தனது மகளை அவர் தனியாக அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இது தொடர்பாக எடியூரப்பா மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் எடியூரப்பாவுக்கு எதிராக பெங்களூரு கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது. அவரை கைது செய்ய போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதற்கிடையே தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி கர்நாடக ஐகோர்ட்டில் எடியூரப்பா மனு தாக்கல் செய்தார். கடந்த 14-ந் தேதி அந்த மனு மீதான விசாரணை ஐகோர்ட்டில் நடந்தது.

அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, எடியூரப்பாவை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து டெல்லியில் இருந்து எடியூரப்பா பெங்களூரு திரும்பினார். சி.ஐ.டி. போலீசார் முன்பு விசாரணைக்கு நேற்று ஆஜராக வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி எடியூரப்பா சி.ஐ.டி. போலீசார் முன்பு  நேற்று ஆஜரானார். அவரிடம் சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து