முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேபாளத்தை வீழ்த்தி வங்கதேசம் சூப்பர் 8-க்கு தகுதி

திங்கட்கிழமை, 17 ஜூன் 2024      விளையாட்டு
Bangladesh 2024-05-11

Source: provided

நியூயார்க் : டி20 உலகக்கோப்பை  தொடரில் நேபாள அணிக்கு எதிரான ஆட்டத்தில் வங்கதேச அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது.

37-வது லீக் போட்டி...

9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.  இந்த தொடரில் நடைபெற்ற 37-வது லீக் போட்டியில் வங்கதேசம் – நேபாளம் அணிகள் மோதின.  இந்த போட்டியில் டாஸ் வென்ற நேபாள அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து வங்கதேச அணி பேட்டிங் செய்தது. ஆரம்பம் முதல் தடுமாற்றத்துடன் விளையாடிய அந்த அணி, 19.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 106 ரன்கள் எடுத்தது.   

107 ரன்கள் இலக்கு...

அந்த அணியில் அதிகபட்சமாக ஷாகிப் அல் ஹசன் 17 ரன்களும் மஹ்மதுல்லா மற்றும் ஹொசைன் தலா 13 ரன்களும் எடுத்தனர். நேபாள அணி தரப்பில் சோம்பால் கமி, திபேந்திர சிங், கேப்டன் ரோஹித் பவுடல், சந்தீப் லாமிச்சானே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.  இதனையடுத்து 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் நேபாள அணி களமிறங்கியது.

85 ரன்கள் மட்டும்... 

அந்த அணியில் சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்த குஷால் மல்லா 27 ரன்களும்,  திபேந்திர சிங் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அவர்களை தொடர்ந்து களமிறங்கிய ஆசிப் ஷேக் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவர்களை தொடர்ந்து களம் இறங்கிய பேட்ஸ்மேன்கள் சமகால இடைவேளையில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் 19.2 ஓவர்கள் முடிவில் நேபாள அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 85 ரன்கள் மட்டுமே எடுத்தது.  இதன்மூலம் 21 ரன்கள் வித்தியாசத்தில் நேபாளத்தை வீழ்த்தி வங்கதேசம் அணி வெற்றி பெற்றது.  இந்த வெற்றியின் மூலம் வங்கதேச அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து