முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒடிஷாவில் இனக்கலவரம்: பாலசோரில் 144 தடை அமல்; இணையதள சேவை முடக்கம்

செவ்வாய்க்கிழமை, 18 ஜூன் 2024      இந்தியா
Internet

Source: provided

பாலசோர் : ஒடிஷாவில் பாலசோர் நகரிலுள்ள புஜாக்கியா பிர் பகுதியில் அப்பகுதியை சேர்ந்த குறிப்பிட்டதொரு சமூகத்தினர், அங்கு விலங்குகளை பலியிட்டு அதன் இரத்தத்தை சாலையில் வழிந்தோடவிட்டதாக குற்றஞ்சாட்டி திங்களன்று(ஜூன் 17) அப்பகுதியை சேர்ந்த மற்றொரு சமூகத்தினர் சாலையில் அமர்ந்து தர்னா நடத்தினர்.

அப்போது தர்னாவில் ஈடுபட்டவர்கள் மீது எதிர்தரப்பிலிருந்து கல்வீசி தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இருதரப்புக்குமிடையே சண்டை மூண்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், இருதரப்பினரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கினர். இந்த கலவரத்தில் காவல்துறையினர் உள்பட பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஒடிஷாவின் புதிய முதல்வர் மோகன் சரண் மஜ்ஜி, பாலசோர் மாவட்ட ஆட்சியரிடம் தொடர்புகொண்டு, அங்குள்ள கள நிலவரம் குறித்து கேட்டறிந்தார். அங்கு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார். பாலசோர் முழுவதும் இணையதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. மக்கள் யாரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து