முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒலிம்பிக்கில் தமிழக வீரர்

செவ்வாய்க்கிழமை, 18 ஜூன் 2024      விளையாட்டு
Prithviraj-Tondaiman 2024-0

Source: provided

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய துப்பாக்கிச்சுடுதல் வீரர் பிரித்விராஜ் தொண்டைமான் தகுதி பெற்றுள்ளார். இதன்மூலம் பிரித்விராஜ் தொண்டைமான் தலைமையில் 5 பேர் கொண்ட குழு பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவுள்ளது. பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கிச்சுடுதல் பிரிவில் பங்கேற்கவுள்ள வீரர்கள் குறித்த அறிவிப்பை இந்திய தேசிய ரைபில் கூட்டமைப்பு இன்று (ஜூன் 18) வெளியிட்டது.

இதில் ஷாட் கன் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த பிரித்விராஜ் தொண்டைமான் தகுதி பெற்றுள்ளார். இவர் புதுக்கோட்டையைச் சேர்ந்தவர். ஆண்கள் பிரிவில் புவனேஷ் மெந்திரத்தா, அனன்ஜீத் சிங் நரூகா, ஆகியோரும் பாரீஸ் ஒலிம்பிக்கிம் பங்கேற்கவுள்ளனர்.பெண்கள் பிரிவில் ராஜேஸ்வரி முகாரி, ரைசா தில்லான், மகேஷ்வரி செளஹான், ஸ்ரேயாஸி சிங் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.

_____________________________________________________________________

நியூசிலாந்து ஆறுதல் வெற்றி

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தரோபா நகரில் நடந்த 39-வது லீக் ஆட்டத்தில், அடுத்த சுற்று வாய்ப்பை இழந்துவிட்ட நியூசிலாந்து அணி, பப்புவா நியூ கினியாவுடன்(சி பிரிவு) மோதியது. மழை காரணமாக ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் மழை நின்றதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பப்புவா நியூ கினியா முதலில் பேட்டிங் செய்தது.

இறுதியில் பப்புவா நியூ கினியா அணி 19.4 ஓவர்களில் 78 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து தரப்பில் பெர்குசன் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனை தொடர்ந்து 79 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 12.2 ஓவர்களில் இலக்கை கடந்தது. இதன் மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. அடுத்த சுற்று வாய்ப்பை இழந்த நியூசிலாந்து அணி, ஆறுதல் வெற்றியுடன் தொடரை விட்டு வெளியேறியது.

_____________________________________________________________________

போல்ட்டுக்கு வில்லியம்சன் புகழாரம்

டி20 உலகக் கோப்பைத் தொடரில் தனது கடைசி லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி பப்புவா நியூ கினியாவை எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில், நியூசிலாந்து மற்றும் உலக கிரிக்கெட்டின் மிகச் சிறந்த சேவகன் டிரண்ட் போல்ட் என அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் அவரைப் பாராட்டியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. இது குறித்து போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது.,

ஒவ்வொரு தொடருக்குப் பிறகும் ஏதேனும் ஒரு விஷயம் நடைபெறும். நடப்பு டி20 உலகக் கோப்பைத் தொடர் நியூசிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் டிரண்ட் போல்ட் விளையாடும் கடைசி ஐசிசி தொடர். நியூசிலாந்து அணிக்காகவும், உலக கிரிக்கெட்டுக்காகவும் அவர் பல சாதனைகள் படைத்துள்ளார். அவர் நியூசிலாந்து அணியிலிருந்து விடைபெறுவதை பார்ப்பதற்கு வருத்தமாக இருக்கிறது. நியூசிலாந்து அணிக்காக அனைத்து வடிவிலான போட்டிகளிலும் அவர் சிறப்பாக செயல்பட்டுள்ளார். புதிய வீரர்கள் அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்பினை அவர் ஏற்படுத்தியுள்ளார் என்றார்.

_____________________________________________________________________

லாக்கி பெர்குசன் சாதனை 

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் ‘குரூப் - சி’ பிரிவு ஆட்டத்தில் பப்புவா நியூ கினியா அணிக்கு எதிராக நியூஸிலாந்து அணியின் பவுலர் லாக்கி பெர்குசன், 4 ஓவர்கள் வீசி ரன் ஏதும் கொடுக்காமல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். டி20 உலகக் கோப்பை வரலாற்றில் வீசிய 24 பந்துகளிலும் ரன் ஏதும் கொடுக்காத முதல் பவுலர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். திங்கட்கிழமை அன்று நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த பப்புவா நியூ கினியா அணி 19.4 ஓவர்களில் 78 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

முதல் இன்னிங்ஸின் 5, 7, 12 மற்றும் 14-வது ஓவர்களை அவர் வீசி இருந்தார். இந்த போட்டியில் 7 விக்கெட்டுகளில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றது. இருந்தாலும் அந்த அணி நடப்பு உலகக் கோப்பை தொடரில் முதல் சுற்றோடு வெளியேறி உள்ளது குறிப்பிடத்தக்கது. தனது செயல்பாடு மகிழ்ச்சி தந்ததாகவும். பெரிய நம்பிக்கையுடன் களம் கண்ட தங்களது அணி முதல் சுற்றோடு வெளியேறுவது வருத்தம் தருவதாகவும் லாக்கி பெர்குசன் தெரிவித்தார். ஆட்ட நாயகன் விருதை அவரே வென்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 weeks 22 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 weeks 22 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து