எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோரின் உடல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தகனம் செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 42 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்த விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்க பல்வேறு துறை அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அத்துடன், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக கண்ணுக்குட்டி என்ற கோவிந்தராஜ், அவரது தம்பி தாமோதரன் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வழக்கை தீர விசாரிக்கவும், தக்க மேல்நடவடிக்கைக்காகவும், சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் உடல்கள் அனைத்தும் நேற்று மாலை கோமுகி நதிக்கரையில் ஒரே இடத்தில் வைத்து தகனம் செய்யப்பட்டது. முன்னதாக உயிரிழந்தவர்களின் இறுதி சடங்கிற்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். வட்டாட்சியர் மற்றும் தனி வட்டாட்சியர்கள் உள்ளிட்ட 29 பேரை நியமித்து அரசு உத்தரவிட்டிருந்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


