எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பார்படாஸ், டி20 உலகக் கோப்பை சூப்பர் 8-ல் மே.இ.தீவை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றிப்பெற்றது.
பந்துவீச்சு...
டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு துவக்க வீரர்களான பிரண்டன் கிங் 23 ரன்களும், சார்லஸ் 38 ரன்களும் எடுத்து அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். பிரண்டன் கிங் காயம் காரணமாக பாதியில் வெளியேறினார்.
181 ரன்கள்...
இதையடுத்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரன், கேப்டன் பவல் ஆகியோர் தலா 36 ரன்கள் எடுத்தனர். அதிரடி வீரர் ரசல் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில் ரூதர்போர்டு அதிரடி காட்ட வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 180 குவித்தது. பிறகு 20 ஓவர்களில் 181 ரன்களை துரத்திய இங்கிலாந்து அணிக்கு துவக்க வீரர் பில் சால்ட் அதிரடியாக ஆடி 47 பந்துகளில் 87 ரன்களை குவித்தார். இவருடன் களமிறங்கிய கேப்டன் ஜாஸ் பட்லர் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். பிறகு வந்த மொயின் அலி 13 ரன்களில் ஆட்டமிழந்தார்.
8 விக்கெட்டுகள்...
அடுத்து வந்த ஜானி பேர்ஸ்டோ 26 பந்துகளில் 48 ரன்களை விளாசினார். இதன் மூலம் இங்கிலாந்து அணி 17.3 ஓவர்களில் வெறும் 2 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்களை குவித்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ராஸ்டன் சேஸ் மற்றும் ஆண்ட்ரே ரசல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


