முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கள்ளக்குறிச்சி சம்பவம்: அரசை கண்டித்து வரும் 25-ம் தேதி தே.மு.தி.க. ஆர்ப்பாட்டம்

வெள்ளிக்கிழமை, 21 ஜூன் 2024      தமிழகம்
Pramalatha 2023-07-24

Source: provided

சென்னை : கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம் தொடர்பாக தமிழக அரசை கண்டித்து தே.மு.தி.க. சார்பில் வரும் 25-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் சுற்றுவட்டார பகுதியில் நடந்த விஷ சாராய  சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் சார்பில் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. ஏற்கனவே அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தன.

இந்த நிலையில், தே.மு.தி.க. சார்பில் வரும் 25-ம் தேதி தி.மு.க அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக  தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தி.மு.க. அரசை கண்டித்து தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் சார்பாக வரும் 25-ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று காலை 10.00 மணி அளவில் மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்க இருக்கிறது. 

இதில் மாவட்ட   செயலாளர்கள் உயர் மட்ட குழு உறுப்பினர்கள் அனைத்து ஒன்றிய நகர பேரூர் கழக கிளை நிர்வாகிகள், தொண்டர்கள், சார்பு அணி நிர்வாகிகள், மகளிர் அணி, பொதுமக்கள் என அனைவரும் பெருமளவில் கலந்து கொண்டு இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை மாபெரும் வெற்றி ஆர்ப்பாட்டமாக நடத்தித் தர வேண்டும் என்று தே.மு.தி.க. சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து