முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச யோகா தினம்: ஸ்ரீநகரில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு

வெள்ளிக்கிழமை, 21 ஜூன் 2024      இந்தியா
Modi 2024-06-21

ஸ்ரீநகர், ஸ்ரீநகரில் தால் ஏரிக்கரையில் உள்ள ஷெர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று யோகா செய்தார்.

2015-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 10-வது சர்வதேச யோகா தினம் நேற்று கொண்டாடப்பட்டது. 

இந்நிலையில் காஷ்மீரில் நடக்கும் யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். ஸ்ரீநகரில் தால் ஏரிக்கரையில் உள்ள ஷெர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று யோகா செய்தார்.  

இந்த நிகழ்ச்சியில் காஷ்மீரை சேர்ந்த பல்வேறு விளையாட்டு வீரர்களும் பங்கேற்றனர். யோகா நிகழ்ச்சியில் 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டு பிரதமர் மோடியுடன் யோகா பயிற்சிகள் செய்தனர்.  

இதையடுத்து பிரதமர் மோடி கூறுகையில், யோகா மூலம் நாம் பெறும் ஆற்றலை ஸ்ரீநகரில் உணர முடியும். யோகா தினத்தில் நாட்டு மக்களுக்கும், உலகின் ஒவ்வொரு மூலையிலும் யோகா செய்து வரும் மக்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

சர்வதேச யோகா தினம் 10 வருட வரலாற்று பயணத்தை நிறைவு செய்துள்ளது. 2014-ல் நான் ஐக்கிய நாடுகள் சபையில் சர்வதேச யோகா தினத்தை முன்மொழிந்தேன். இந்தியாவின் இந்த முன்மொழிவை 177 நாடுகள் ஆதரித்தன, இதுவே சாதனையாக இருந்தது. 

அதன் பிறகு, யோகா தினம் புதிய சாதனைகளை படைத்து வருகிறது. நான் வெளிநாட்டில் இருக்கும்போது, உலகத் தலைவர்கள் என்னிடம் யோகா பற்றி விவாதிக்கிறார்கள். 10-வது சர்வதேச யோகா தினத்தை கொண்டாடும் வேளையில், யோகாவை தங்கள் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக மாற்றுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

கடந்த 10 ஆண்டுகளில், யோகாவின் விரிவாக்கம் யோகா தொடர்பான கருத்தை மாற்றியுள்ளது. தற்போது உலகம் ஒரு புதிய யோகா பொருளாதாரத்தை முன்னோக்கிப் பார்க்கிறது. இந்தியாவில் இருந்து ரிஷிகேஷ் மற்றும் காசியில் இருந்து கேரளா வரை யோகா சுற்றுலாவின் புதிய இணைப்பு காணப்படுகிறது. 

உலகெங்கிலும் இருந்து சுற்றுலா வரும் பயணிகள் இந்தியாவில் உண்மையான யோகாவை கற்றுக் கொள்ள விரும்புகிறார்கள். மக்கள் தங்கள் உடற்தகுதிக்காக தனிப்பட்ட யோகா பயிற்சியாளர்களை கூட வைத்திருக்கிறார்கள். 

இவை அனைத்தும் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளையும், இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளன. இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து