முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் மறைவு : முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்

வெள்ளிக்கிழமை, 21 ஜூன் 2024      தமிழகம்
SM-Packer 2024-06-21

Source: provided

சென்னை : இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் எஸ்.எம். பாக்கர் மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தை உருவாக்கியவர்களில் எஸ்.எம்.பாக்கரும் ஒருவர். நிர்வாகிகள் சிலருடன் ஏற்பட்ட கருத்து முரணால் அங்கிருந்து பிரிந்து பி.ஜெய்னுல் ஆபிதீனுடன் இணைந்து 2004-ம் ஆண்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பை எஸ்.எம்.பாக்கர் உருவாக்கினார்.

இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை, இடஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த அமைப்பு சார்பில் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது. 

இந்த நிலையில் ஆபிதீனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பில் இருந்து விலகிய எஸ்.எம்.பாக்கர் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பைத் தொடங்கினார். 

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருதய நோயால் பாதிக்கப்பட்ட எஸ்.எம். பாக்கர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று நலமடைந்தார். எனினும்,  கடந்த சில மாதங்களாக தொடர்ந்து  சிகிச்சை பெற்று வந்தார். 

இந்த நிலையில்,அவருக்கு நுரையீரலில் நிமோனியா தொற்று ஏற்பட்டது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று முன்தினம் இரவு காலமானார். அவரது மறைவிற்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.   அவரது மறைவிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 weeks 22 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 weeks 22 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து