எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : முறைகேடு புகார் எதிரொலியாக யு.ஜி.சி. நெட் தேர்வு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வும் ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலான சி.எஸ்.ஐ.ஆர்., யு.ஜி.சி.யுடன் இணைந்து, வாழ்க்கை அறிவியல், வேதியியல் அறிவியல், இயற்பியல் அறிவியல், கணித அறிவியல் மற்றும் பூமி, வளிமண்டலம், பெருங்கடல் மற்றும் கிரக அறிவியல் ஆகிய 5 பாடங்களுக்கு நெட் தகுதி தேர்வை நடத்துகிறது.
தேசிய தேர்வு முகமையினால் நடத்தப்படும் இத்தேர்விற்கு விண்ணப்பங்கள் கடந்த மே மாதம் 1-ம் தேதி முதல் தொடங்கி மே 27-ம் தேதி வரை பெறப்பட்டது. இதற்கான தேர்வு வரும் 25-ம் தேதி தொடங்கி 27-ம் தேதி வரை நடைபெற இருந்தது.
இந்நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களினால் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. தேர்விற்கான புதிய அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


