முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1,563 மாணவர்களுக்கு இன்று நீட் மறுதேர்வு

சனிக்கிழமை, 22 ஜூன் 2024      இந்தியா
NEET 2024-05-04

Source: provided

புதுடெல்லி : நடந்து முடிந்த நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1,563 பேருக்கு, அதனை ரத்து செய்து மறுதேர்வு நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்த நிலையில், நாடு முழுவதும் 1500 பேருக்கு இன்று மறுதேர்வு நடைபெறவிருக்கிறது.

கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்ட தேர்வர்களுக்கு ஜூன் 23-ஆம் தேதி மறுதேர்வு நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் ஜூன் 30-ஆம் தேதி வெளியிடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. சுமார் 10 நாள்களுக்கு முன்னதாக, மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருந்த பரபரப்பான நாளில், தேசிய தேர்வு முகமை நீட் தேர்வு முடிவை வெளியிட்டிருந்தது. இதுவே மிகப்பெரிய சர்ச்சையான நிலையில், இதுவரை நடந்திராத வகையில், 67 பேர் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தைப் பிடித்தது அடுத்த சர்ச்சையைக் கிளப்பியது. இது சர்ச்சையான போதுதான், தேர்வெழுதிய லட்சக்கணக்கானோரில் 1563 பேருக்கு மட்டும் தேசிய தேர்வு முகமை கருணை மதிப்பெண்களை அளித்ததாகக் கூறியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கியது.

என்சிஇஆர்டி பாடப் புத்தகங்களில் மேற்கொள்ளப்பட்ட சில மாற்றங்களாலும், சில தேர்வு மையங்களில் மாணவர்கள் நேரத்தை இழந்ததாலும் கூடுதல் (கருணை) மதிப்பெண்கள் வழங்கப்பட்டன என்று என்டிஏ விளக்கம் அளித்தது. தேர்வர்கள் நேரத்தை இழந்ததால் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதை எதிர்த்து நீட் தேர்வர் சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதில் எந்த ஒரு வெளிப்படையான நடைமுறையும் பின்பற்றப்படவில்லை என்பது நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு கருணை மதிப்பெண்களை ரத்து செய்வதாக அறிவித்தது.

இந்த நிலையில்தான், இன்று நடைபெறும் நீட் மறுதேர்வை எழுத விரும்பாத மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்களின்றி தேர்வில் அவர்கள் பெற்ற மதிப்பெண்களே இறுதி மதிப்பெண்களாக எடுத்துக்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. நிகழாண்டு இளநிலை மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு எனப்படும் நீட் தேர்வை எழுதியவர்களில் 1,500-க்கும் மேற்பட்டோருக்கு அந்தத் தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமை (என்டிஏ) தன்னிச்சையாக 70 முதல் 80 மதிப்பெண்கள் வரை கருணை மதிப்பெண்கள் என்ற பெயரில் கூடுதலாக வழங்கியுள்ளது.

நிகழ் கல்வியாண்டில், இளநிலை மருத்துவப் படிப்பு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதை நிறுத்திவைக்க மறுப்பு தெரிவித்த நீதிமன்ற அமர்வு, வெற்றி பெற்ற மாணவர்களின் சேர்க்கையானது நீட் தேர்வு குளறுபடிகள் சார்ந்த பிற மனுக்கள் மீதான உத்தரவுக்கு உட்பட்டது எனத் தெரிவித்தது.

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததால் அதை ரத்து செய்வது உள்பட நீட் தேர்வு குளறுபடிகளுக்கு எதிரான பிற மனுக்கள் மீதான விசாரணையை கோடை விடுமுறைக்குப் பின் ஜூலை 8-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக சுப்ரீம் கோர்ட் அமர்வு தெரிவித்துள்ளது. அரியாணாவில் ஒரே தேர்வு மையத்தில் 6 பேர் கருணை மதிப்பெண்கள் மூலம் முழு மதிப்பெண்களான 720-ஐ பெற்றிருந்தனர். தற்போது அவர்களின் கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்டதையடுத்து, நீட் தேர்வு 2024-இல் முதலிடம் பிடித்தவர்களின் எண்ணிக்கை 67-லிருந்து 61-ஆக குறைந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து