முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஆந்திராவை சேர்ந்தவர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 23 ஜூன் 2024      உலகம்
America 2024-06-23

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்காவில் சூப்பர் மார்க்கெட்டில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஆந்திராவை சேர்ந்தவர் பலியானதாக தெரிய வந்துள்ளது. 

அமெரிக்காவின் அர்கான்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் கடந்த 21-ம் தேதி மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இந்த சம்பவத்தில் ஒரு இந்தியர் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். 

இதில் உயிரிழந்த இந்தியரின் பெயர் தசாரி கோபிகிருஷ்ணா(32) என்பதும், அவர் ஆந்திர பிரதேச மாநிலம் பபாட்லா மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. 

கோபிகிருஷ்ணாவுக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா சென்ற கோபிகிருஷ்ணா, அர்கான்சாஸ் மாகாணத்தில் உள்ள போர்டைஸ் பகுதியில் ஒரு பல்பொருள் அங்காடியில் வேலைக்கு சேர்ந்தார். 

இந்நிலையில் கடந்த 21-ம் தேதி கடைக்குள் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கோபிகிருஷ்ணா படுகாயமடைந்தார். துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் கடையில் இருந்து சில பொருட்களை திருடிச் சென்றது அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது. 

இதனிடையே படுகாயமடைந்த கோபிகிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் ஆந்திராவில் உள்ள கோபிகிருஷ்ணாவின் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து