Idhayam Matrimony

டெல்லி விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவன் கைது

ஞாயிற்றுக்கிழமை, 23 ஜூன் 2024      இந்தியா
Delhi-Airport

Source: provided

புதுடெல்லி : டெல்லி விமான நிலையத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். 

முன்னதாக கடந்த திங்கள் கிழமை, துபாய் செல்லும் விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக டெல்லி விமான நிலையத்துக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. இதையடுத்து விமான நிலையத்தில் அவசரநிலை அறிவிக்கப்பட்டது. 

மேலும் உயர் எச்சரிக்கையுடன் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து அந்த வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்று கண்டுபிடிக்கப்பட்டது. 

இந்த நிலையில் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மின்னஞ்சல் அனுப்பிய உடனே அந்த மின்னஞ்சல் ஐ.டி. நீக்கப்பட்டது  தெரியவந்தது. 

மேலும் அந்த மின்னஞ்சல் உத்தரகாண்ட் மாநிலம் பித்தோராகரில் இருந்து அனுப்பப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் மின்னஞ்சல்அனுப்பிய 13 வயது சிறுவனை கைது செய்தனர். 

அவனிடம் விசாரணை மேற்கொண்ட போது, சில நாட்களுக்கு முன்பு இளைஞர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த செய்தியை பார்த்து அதுபோல தானும் விளையாட்டுக்காக அனுப்பியதாக தெரிவித்துள்ளான். 

படிப்பதற்காக தனது பெற்றோர் வாங்கி கொடுத்த செல்போன் மூலம் அந்த மின்னஞ்சலை அனுப்பியதாகவும் பின்னர் பயந்து போய் அந்த ஐ.டி.யை நீக்கி விட்டதாகவும் தெரிவித்துள்ளான். இதையடுத்து போலீசார் அந்த சிறுவனை அவனது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 13 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 13 hours ago
View all comments

வாசகர் கருத்து