எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, தலைநகர் டெல்லியில் நிலவும் தண்ணீர் பிரச்னையை முன்னுரிமை அடிப்படையில் தீர்க்க வலியுறுத்தியுள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் கடிதம் எழுதியுள்ளார்.
டெல்லிக்கு கிடைக்கவேண்டிய பங்குத் தண்ணீரை அரியாணா தரமறுத்துள்ள நிலையில் தலைநகரில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. செய்தியார்களுடன் பேசிய டெல்லி அமைச்சர்கள் கோபால் ராய், சௌரப் பரத்வாஜ், கைலாஷ் கஹ்லோட் மற்றும் இம்ரான் ஹுசைன் ஆகியோர் அதிஷியின் காலவரையற்ற உண்ணாவிரதம் நான்கு நாளாகியுள்ளதாகவும், அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருவதாகவும் தெரிவித்தனர்.
ஜங்புராவின் போகலில் அதிஷியின் உண்ணாவிரதப் போராட்டம் நடந்த இடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தண்ணீர் பிரச்னை குறித்து பிரதமருக்கு கடிதம் எழுத அமைச்சர்கள் முடிவு செய்தனர். அதன்படி, அமைச்சர்கள் அந்தக் கடிதத்தில் கூறியதாவது, கடும் வெப்பம் நிலவிய போதிலும், அரியாணாவில் இருந்து டெல்லிக்கு உரிய தண்ணீரை வழங்கப்படவில்லை. டெல்லியில் மொத்த நீர் விநியோகம் 1,005 கனஅடியாகவும், இதில் 613 கனஅடி நீர் மட்டுமே அரியாணாவில் இருந்து அனுப்பப்படுகிறது. கடந்த பல வாரங்களாக அரியாணாவில் இருந்து வரும் தண்ணீரின் அளவு குறைந்துள்ளதாகவும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


