முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெருவில் பனியில் உறைந்த மலையேற்ற வீரரின் உடல் 22 ஆண்டுகளுக்கு பிறகு மீட்பு

புதன்கிழமை, 10 ஜூலை 2024      உலகம்
Peru 2024-07-10

Source: provided

லிமா : பெருவில் மாயமான மலையேற்ற வீரரின் உடல் பனியில் உறைந்த  நிலையில் 22 ஆண்டுகளுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளது. 

தென் அமெரிக்க நாடான பெருவில் சுமார் 22 ஆயிரம் அடி உயரம் கொண்ட ஹஸ்கரான் மலை அமைந்துள்ளது. இந்த மலையில் கடந்த 2002-ம் ஆண்டு ஜூன் மாதம், அமெரிக்காவைச் சேர்ந்த வில்லியம் ஸ்டாம்பிள் என்ற மலையேற்ற வீரர் பனிச்சரிவில் சிக்கி மாயமானார். 

பின்னர் நீண்ட நாட்களாக தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால், தேடுதல் பணி கைவிடப்பட்டது. இந்த நிலையில் 22 ஆண்டுகளுக்கு பிறகு வில்லியம் ஸ்டாம்பிளின் உடல் ஹஸ்காரன் மலையில் உள்ள கார்டிலெரா பிளாங்கா மலைத்தொடரில் உறைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

அவரது உடல், உடைகள், மலையேற்றக்கருவிகள் மற்றும் காலணிகள் ஆகியவை பனியில் உறைந்து பதப்படுத்தப்பட்ட நிலையில் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவரது உடைமைகளில் இருந்த பாஸ்போர்ட் மூலம் வில்லியம் ஸ்டாம்பிளினை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து