எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, கல்வராயன் மலைப்பகுதி மக்களின் தற்போதைய நிலை என்ன? என்றும் அரசின் நலத்திட்டங்கள் அங்கு சென்றடைகிறதா? என்றும் தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
கள்ளக்குறிச்சி விஷ சாராய மரண சம்பவத்தை தொடர்ந்து கல்வராயன் மலைப்பகுதி மக்களின் மேம்பாடு தொடர்பாக சென்னை ஐகோர்ட் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், நீதிபதி குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில்நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கோரி வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, "கல்வராயன் மலைப்பகுதி 1976-ல் தான் இந்தியாவுடன் இணைந்திருக்கிறது. 1996-ல் தான் அந்த பகுதி மக்களுக்கு வாக்குரிமை கிடைத்திருக்கிறது.
அங்கு சுமார் 95 சதவிகித மக்கள் பழங்குடியின மக்களாக இருக்கிறார்கள். அவர்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறார்கள். மக்களின் வாக்குகளைப் பெற்ற பின் அவர்களுக்கு அடிப்படை வசதிகள் உள்ளதா? இல்லையா? என்பதை கவனிக்கவில்லை என்றால் அரசின் அரசியலமைப்பு கடமை என்ன? என்ற கேள்வி எழுகிறது" என்று தெரிவித்தார்.
இதையடுத்து இந்த வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவியாக நியமிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் தமிழ்மணி, எவரேனும் அங்கு நேரில் சென்று ஆராய்ந்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "கல்வராயன் மலைப்பகுதி மக்களின் தற்போதைய நிலை என்ன? பட்டியலின, பழங்குடியின மக்களுக்கான அரசின் நலத்திட்டங்கள் அவர்களை சென்றடைகிறதா? என்பது குறித்து ஆராய்ந்து, வரும் 24-ந்தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


