முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கரூரில் மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் புதிய ஷோரூம் : மாநகராட்சி மேயர் திறந்து வைத்தார்

புதன்கிழமை, 10 ஜூலை 2024      தமிழகம்
Kavitha 2024-07-10

Source: provided

கரூர் : கரூரில் மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் புதிய ஷோரூமை மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் மற்றும் துணை மேயர் தாரணி சரவணன் ஆகியோர் திறந்து வைத்தனர் 

உலகின் சில்லறை நகை விற்பனையில் வேகமாக வளர்ந்து வரும் முன்னணி நிறுவனமும் இந்தியாவில் பல்வேறு துறைகளில் கால் பதித்து தனது வர்த்தகத்தை விரிவாக்கி கொண்டுள்ள மலபார் குழுமத்தின் முன்னோடி நிறுவனமான மலபார் கோல்டு ரூ டைமண்ட்ஸ் நிறுவனம் தற்போது 13 நாடுகளில் 350க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களுடன் உலகில் மிகப்பெரிய நகை விற்பனை நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் சென்னை கோவை மதுரை நாகர்கோயில் திருநெல்வேலி சேலம் ஈரோடு தஞ்சாவூர் இராமநாதபுரம் தர்மபுரி வேலூர் திருச்சி கும்பகோணம் திருப்பூர் காரைக்குடி மயிலாடுதுறை புதுக்கோட்டை மார்தாண்டம் புதுச்சேரி கரூர் ஆகிய நகரங்களில் 27 கிளைகளை கொண்டுள்ளது தற்போது தனது புதிய ஷோரூமை கரூரில் திறந்துள்ளது புதிய ஷோரூமை மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் மற்றும் துணை மேயர் தாரணி சரவணன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

இந்த ஷோரூமில் அதிகமான இடவசதி புதிய மாடல்கள் மற்றும் டிசைன்களில் தங்கம் வைரம் மற்றும் வெள்ளி நகைகளின் தொகுப்புகள் அதிகமாக இடம்பெற்றுள்ளனர் கலைநயமிக்க அணிகலன்கள் இங்கு கிடைப்பது சிறப்பம்சமாகும் அணிந்தாலே ஜொலிக்கும் வைர நகைகளான மைன் பிரம்மாண்டமான வடிவமைப்புகளை கொண்டுள்ள வெட்டாத வைரத்தால் செய்யப்பட்ட எரா மிகவும் பொக்கி~மாக கருதப்படும் விலை உயர்ந்த கற்களால் செய்யப்பட்ட நகை தொகுப்பான பிரீசியா நகைகள் கைவினை கலைஞர்களால் கையால் செய்யப்பட்ட நகைகளின் தொகுப்பான எத்தினிக் நமது கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பாரம்பரிய இந்திய நகை வடிவமைப்புகளில் உருவான டிவைன் குழந்தைகளுக்கான நகை தொகுப்பான ஸ்டார்லெட் ஆகியவை இந்த ஷோரூமில் இடம்பெற்றுள்ளன.

இந்நிகழ்ச்சியில் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தமிழ்நாடு மண்டலத்தலைவர் யாசர், தமிழ்நாடு மண்டல வணிகத்தலைவர் சபீர் அலி, மேற்கு மண்டலத்தலைவர் நௌசாத், கிழக்கு மண்டலத்தலைவர் சுதீர் முகமது, கரூர் கிளை துணைத்தலைவர் முபா மற்றும் மேலாண்மை உறுப்பினர்கள் கிளை ஊழியர்கள் ஆகியோர் உடனிருந்தனர் 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து