முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் 23-ம் தேதி வரை சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல்

சனிக்கிழமை, 13 ஜூலை 2024      தமிழகம்
Chavik-Sankar 2024-05-27

Source: provided

கரூர் : போலீஸ் காவல் விசாரணை முடிந்து கரூர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கருக்கு ஜூலை 23-ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

கரூரைச்சேர்ந்த கிருஷ்ணன் (43) கரூரில் பிரியாணிக்கடை நடத்தி வருகிறார். இவர் சென்னையைச் சேர்ந்த விக்னேஷிடம் ஆன்லைன் வர்த்தகம் செய்வதற்காக ரூ.7 லட்சம் அளித்துள்ளார். இரண்டு, மூன்று மாதங்களில் லாபத்துடன் பணத்தை தருவதாக கூறிய விக்னேஷ் சொன்னபடி அந்த பணத்தை கொடுக்கவில்லை. இதுகுறித்து கிருஷ்ணன் அவரை தொடர்பு கொண்டு கேட்டபோது, மிரட்டல் விடுத்துள்ளார். விக்னேஷ் கடந்த ஜூன் 5-ம் தேதி கரூர் வந்தபோது கிருஷ்ணன் அவரை நேரில் சந்தித்து பணத்தை கேட்டுள்ளார்.

அப்போதும் மிரட்டல் விடுத்த விக்னேஷ், கிருஷ்ணனை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்து கிருஷ்ணன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விக்னேஷ் மீது மோசடி, தகாத வார்த்தைகளால் திட்டுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் கரூர் நகர போலீஸார் வழக்கும் பதிவு செய்தனர்.

இவ்வழக்கில் விக்னேஷ் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சவுக்கு சங்கர் இந்த வழக்கில் 2-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இதையடுத்து, இந்த வழக்கில் சவுக்கு சங்கரையும் கைது செய்த கரூர் போலீஸார், கடந்த 9-ம் தேதி கரூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து, அவரை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் மனு செய்தனர். ஆனால், போலீஸாருக்கு 4 நாட்கள் மட்டும் அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து சவுக்கு சங்கரை போலீஸ் காவலில் விசாரணைக்கு எடுத்த கரூர் போலீஸார், 4 நாள் விசாரணை முடிந்து கரூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 1-ல் நேற்று (ஜூலை 13) மதியம் மணிக்கு ஆஜர்படுத்தினர். அப்போது, சவுக்கு சங்கரின் நீதிமன்ற காவலை ஜூலை 23-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து சவுக்கு சங்கர் சென்னை புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து