எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : காஷ்மீரில் துணைநிலை கவர்னருக்கு மத்திய அரசு கூடுதல் அதிகாரம் வழங்கியதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
ஒன்றுபட்ட காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து கடந்த 2019-ம் ஆண்டு விலக்கப்பட்டு அந்த மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. இதில் லடாக் யூனியன் பிரதேசத்துக்கு சட்டசபை இல்லாத நிலையில், சட்டசபை கொண்டிருக்கும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில் காஷ்மீரில் போலீஸ், சட்டம்-ஒழுங்கு, ஐ.ஏ.எஸ்-ஐ.பி.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீஸ் அதிகாரிகள் நியமனம் மற்றும் இடமாற்றம் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகம் சார்ந்த முடிவுகள் எடுக்க துணை நிலை கவர்னருக்கு கூடுதல் அதிகாரங்களை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கி இருக்கிறது.
மேலும் மாநில அரசு வக்கீல், சட்ட அதிகாரிகள் நியமனம், ஊழல் தடுப்பு பிரிவு தொடர்பான விவகாரங்களில் முடிவுகளை எடுக்கவும் துணைநிலை கவர்னருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் 2019-ல் திருத்தங்களை செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு காஷ்மீர் அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. இதுதொடர்பாக காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் விகார் ரசூல் தனது டுவிட்டர் பக்கத்தில்,
காஷ்மீரில் சரியான ஜனநாயக நடைமுறை மற்றும் மாநில அந்தஸ்து வழங்குவதற்கு முன்னரே ஜனநாயக படுகொலை செய்யப்பட்டிருப்பது தெளிவாகிறது. போலீஸ், சட்டம், ஒழுங்கு, அதிகாரிகள் பணியிடமாற்றம் உள்ளிட்டவற்றில் அதிக அதிகாரம் துணைநிலை கவர்னருக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது என குறிப்பிட்டு உள்ளார்.
மத்திய அரசின் இந்த அறிவிப்பு மூலம் காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை மத்திய அரசு உடனடியாக வழங்காது என்பது தெளிவாவதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வரும், தேசிய மாநாடு கட்சி துணைத் தலைவருமான உமர் அப்துல்லா, மத்திய அரசின் இந்த நடவடிக்கை மூலம் காஷ்மீரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் முதல்வர், ஒரு உதவியாளரை நியமிக்கக்கூட துணைநிலை கவர்னரை கெஞ்ச வேண்டும். அதிகாரமற்ற, ரப்பர் ஸ்டாம்ப் முதல்வரை விட காஷ்மீர் மக்கள் தகுதியானவர்கள் என சாடியுள்ளார்.
மக்கள் ஜனநாயக கட்சி தலைவரும், மற்றொரு முன்னாள் முதல்வருமான மெகபூபாவின் மகளும், ஊடக ஆலோசருமான இல்திஜா முப்தி தனது டுவிட்டர் பக்கத்தில்,
காஷ்மீரில் தேர்தல் நடத்த இந்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இங்கு பா.ஜ.க. அல்லாத அரசு அமையும் என மத்திய அரசுக்கு தெரிந்து இருக்கிறது.
இதனால்தான் மக்களால் தேர்வு செய்யப்படாத துணைநிலை கவர்னருக்கு அதிக அதிகாரங்களை வழங்கி அவர் மூலம் காஷ்மீரை ஆள அரசு நினைக்கிறது என குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


