முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2023-ம் ஆண்டில் இந்தியாவில் தடுப்பூசி செலுத்தாத 16 லட்சம் குழந்தைகள் : உலக சுகாதார அமைப்பு தகவல்

புதன்கிழமை, 17 ஜூலை 2024      இந்தியா
World health

Source: provided

புதுடெல்லி : இந்தியாவில் கடந்த 2023-ம் ஆண்டில் சுமார் 16 லட்சம் குழந்தைகளுக்கு எந்தவொரு தடுப்பூசியும் செலுத்தப்படவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

உலக சுகாதார அமைப்பு மற்றும் யூனிசெப் இணைந்து வெளியிட்ட தரவுகள் மூலமாக சில அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்துள்ளது. அதில், இந்தியாவில் கடந்த 2023-ம் ஆண்டில் சுமார் 16 லட்சம் குழந்தைகளுக்கு எந்தவொரு தடுப்பூசியும் செலுத்தப்படவில்லை என்கிற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.   

இதன் மூலம், அதிக குழந்தைகளுக்கு எந்தவொரு தடுப்பூசியும் செலுத்தாத மோசமான நாடுகளின் பட்டியலில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் இருக்கும் நைஜீரியாவில் 21 லட்சம் குழந்தைகள் எந்தவொரு தடுப்பூசியும் செலுத்தாமல் இருக்கின்றனர். 

இந்தப் பட்டியலில் இந்தியாவுக்கு அடுத்து எத்தியோப்பியா, காங்கோ, சூடான், இந்தோனேசியா ஆகிய நாடுகள் உள்ளன. முதல் 20 நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் 10-வது இடத்திலும், சீனா 18-வது இடத்திலும் உள்ளன. 

கடந்த 2021-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2023-ல் இந்தியாவின் நிலை சற்று முன்னேற்றம் கண்டுள்ளது. 2021-ல் நாட்டில் எந்தவொரு தடுப்பூசியும் செலுத்தாத குழந்தைகளின் எண்ணிக்கை உலகிலேயே அதிகபட்சமாக 27.3 லட்சமாக இருந்தது.  

2021-ல் கணக்கிடப்பட்ட தடுப்பூசி செலுத்தப்படாத குழந்தைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்தியா உள்பட 20 நாடுகளில் நோய்த்தடுப்பு திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. 

ஆனாலும் அதில் சற்றுதான் முன்னேற்றம் கண்ட நிலையில், இந்த எண்ணிக்கையை குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தடுப்பூசி செலுத்தப்படாத குழந்தைகளைக் கண்டறிந்து தடுப்பூசி செலுத்துவதற்கு அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து