முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் திருப்பதி திருக்குடை ஊர்வலம் : பக்தர்களுக்கு ஆர்.ஆர்.கோபால்ஜி அழைப்பு

சனிக்கிழமை, 13 செப்டம்பர் 2025      ஆன்மிகம்
Tirupati 2023-09-26

Source: provided

சென்னை : சென்னையில் திருப்பதி திருக்குடை ஊர்வலம் நடப்பதையொட்டி வருகிற 22-ம் தேதி பக்தர்களுக்கு ஆர்.ஆர். கோபால்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.

திருப்பதி திருக்குடை ஊர்வலம், ஹிந்து தர்மார்த்த ஸமிதி டிரஸ்ட் சார்பில், வருகிற 22-ம் தேதி, காலை 10.31 மணிக்கு, பூக்கடை சென்ன கேசவ பெருமாள் கோவிலில் இருந்து சிறப்பு பூஜைகளுடன் தொடங்குகிறது. மாலை 4 மணிக்கு கவுனி தாண்டுகிறது. உடுப்பி பலிமார் மடம் பீடாதிபதி ஸ்ரீ வித்யாதீஷ தீர்த்தரு சுவாமிகள் ஆசியுரை வழங்கி தொடங்கி வைக்கிறார். இதுகுறித்து ஹிந்து தர்மார்த்த ஸமிதி டிரஸ்ட் அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோத்சவ காலத்தில், தமிழகத்தில் இருந்து ஆண்டுதோறும் 2 மங்கலப்பொருட்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன. ஒன்று ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சூடிக்கொடுத்த மலர் மாலை. மற்றொன்று, 150 ஆண்டுகளுக்கும் மேலாக, சென்னையில் இருந்து ஊர்வலமாகச் சென்று, ஏழுமலையான் கருடசேவைக்காக சமர்ப்பிக்கப்படும், பாரம்பரியமிக்க திருக்குடைகள். ஆதிசேஷனே, திருக்குடையாக திருஉருவம் பெற்று பெருமாளுக்கு சேவை சாதிக்கிறார் என்பது ஐதீகம்.

பெருமாளிடம் வேண்டிக்கொள்ளும் பிரார்த்தனைகளை, திருப்பதி திருக்குடையிடம் பக்தர்கள் சமர்ப்பிப்பது வழக்கம். அது ஏழுமலையானை சென்றடையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதனால்தான், திருப்பதி திருக்குடை ஊர்வல காலத்தில் சென்னையில் இருக்கும் பக்தர்கள், விரதம் இருந்து திருக்குடைகளை தரிசிக்கிறார்கள். ஆரத்தி காண்பித்து வழிபடுகிறார்கள். திருக்குடை ஊர்வலம் செல்லுமிடமெல்லாம் மங்களம் பெருகும், வறுமை நீங்கும், நோய் நொடி விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. திருப்பதி பிரம்மோத்சவ காலத்தில், ஏழுமலையான் கோவிலில் நடக்கும் கருட சேவையை முன்னிட்டு, தமிழக மக்கள் சார்பாக, ஒவ்வொரு ஆண்டும் ஹிந்து தர்மார்த்த ஸமிதி டிரஸ்ட், திருமலை ஸ்ரீவெங்கடேசப் பெருமாளுக்கு 11 அழகிய வெண்பட்டு திருக்குடைகளை சென்னையில் இருந்து 5 நாட்கள் ஊர்வலமாக எடுத்து சென்று சமர்ப்பணம் செய்து வருகிறது. 21-வது ஆண்டாக, இந்த ஆண்டும் திருப்பதி திருக்குடை ஊர்வலம், வருகிற 22-ம் தேதி, காலை 10.31 மணிக்கு, சென்னை பூக்கடை சென்ன கேசவ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் தொடங்குகிறது.

தொடர்ந்து 5 நாட்கள் ஊர்வலமாக சென்று, 27-ம் தேதி சனிக்கிழமை மாலை 3 மணிக்கு திருமலையில், ஏழுமலையானுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. தென் இந்தியாவின் மிகபிரமாண்டமான திருக்குடை ஊர்வலத்தை 20 லட்சத்திற்கும் அதிகமானோர் தரிசிக்கின்றனர். 22-ம் தேதி, தொடக்கவிழா நிகழ்ச்சியில், உடுப்பி ஸ்ரீ பலிமார் மடம் பீடாதிபதி ஸ்ரீ வித்யாதீஷ தீர்த்தரு சுவாமிகள் ஆசியுரை வழங்கி திருக்குடைகள் ஊர்வலத்தை கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார். ஹிந்து தர்மார்த்த ஸமிதி டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் எஸ். வேதாந்தம்ஜி, அறங்காவலர் ஆர்ஆர். கோபால்ஜி, விசுவ ஹிந்து வித்யா கேந்திரா பொதுச் செயலாளர் டாக்டர் கிரிஜா சேஷாத்திரி, தமிழ்நாடு விசுவ ஹிந்து பரிஷத் மாநில செயல் தலைவர் ஆர். செல்லமுத்து (ஐஏஎஸ் ஓய்வு), பொதுச்செயலாளர் எஸ். சோமசுந்தரம் ஆகியோர் பேசுகின்றனர். அன்றைய தினம் திருக்குடை ஊர்வலம், என்.எஸ்.சி. போஸ் சாலை, கோவிந்தப்ப நாயக்கன் தெரு சந்திப்பு, பைராகி மடம், வால்டாக்ஸ் சாலை வழியாக வந்து மாலை 4 மணிக்கு திருக்குடைகள் கவுனி தாண்டுகிறது.

பின்னர் சால்ட் கொட்டகை (நடராஜா தியேட்டர்), சூளை நெடுஞ்சாலை, அவதான பாப்பையா சாலை, வடமலை தெரு, தானா தெரு சந்திப்பு, செல்லப்பா தெரு, ஓட்டேரி பாலம் வழியாக கொன்னுார் நெடுஞ்சாலை, தாக்கர் சத்திரம், இரவு அயனாவரம் காசி விஸ்வநாதர் கோவில் சென்றடைகிறது. 23-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) ஐசிஎப், ஜி.கே.எம். காலனி, திரு.வி.க.நகர், பெரம்பூர் வழியாக, வில்லிவாக்கம் சவுமிய தாமோதரப் பெருமாள் கோவில் சென்றடைந்து, இரவு தங்குகிறது. 24-ம் தேதி (புதன்கிழமை) பாடி, அம்பத்துார் எஸ்டேட், முகப்பேர், அம்பத்துார், திருமுல்லைவாயில் சென்றடைந்து இரவு தங்குகிறது.

திருக்குடைகள் சமர்ப்பணம் 25-ம் தேதி (வியாழக்கிழமை) ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், வழியாக, திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவில் சென்றடைந்து இரவு தங்குகிறது. 26-ம் தேதி (வெள்ளிக்கிழமை) திருவள்ளூர் மணவாள நகர், திருப்பாச்சூர் வழியாக திருச்சானூர் சென்றடைகிறது. அங்கு பத்மாவதி தாயாருக்கு 2 திருக்குடைகள் சமர்க்கப்படுகின்றன. பின்னர், 27-ம் தேதி (சனிக்கிழமை) திருமலை செல்லும் திருக்குடைகள், மாலை 3 மணிக்கு மாடவீதி வலம்வந்து வஸ்திரம் மற்றும் மங்களப் பொருட்களுடன் திருப்பதி ஜீயர்கள் முன்னிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம், ஏழுமலையானுக்கு திருக்குடைகள் சமர்ப்பணம் செய்யப்படுகின்றன.

திருப்பதிக் குடை ஊர்வலம் செல்லும் வழியெங்கும் வசிக்கும் பொதுமக்கள், ஏழுமலையான் பக்தர்கள், திருக்குடைகளை தரிசித்து, ஏழுமலையான் அருளைப்பெற குடும்பத்துடன் வாருங்கள். திருக்குடைகளை தரிசித்து, தங்கள் பிரார்த்தனைகளை சமர்ப்பியுங்கள். திருப்பதி ஸ்ரீ வெங்கடேச பெருமாளுக்கு சமர்ப்பிக்க வேண்டிய காணிக்கைகள், திருப்பதி திருக்குடை ஊர்வலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. ஊர்வலம் வரும்போது திருக்குடையின் மீது நாணயங்களை வீசுவதோ, காணிக்கைகள் செலுத்துவதோ கூடாது. திருப்பதி திருக்குடைகள் தனிநபர் வீடுகளுக்கோ, கடைகளுக்கோ வந்து தனிப்பட்ட பூஜையை ஏற்றுக்கொள்ளாது. திருப்பதி திருக்குடை தொடர்பாக எவரிடமும் எவ்வித கட்டணமும் தரவேண்டாம். நன்கொடைகள் வாங்கப்பட மாட்டாது. உண்டியல் வசூல் கிடையாது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து