எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ. 2000 உதவித்தொகை வழங்கிடும் அன்புக் கரங்கள் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று (செப். 15) தொடக்கி வைத்தார்.
தமிழக அரசின் ‘தாயுமானவர்’ திட்டத்தின் ஒரு பகுதியாக, பெற்றோா் இருவரையும் இழந்த மற்றும் பெற்றோரில் ஒருவரை இழந்து மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாக்கும் வகையில், ‘அன்புக்கரங்கள்’ திட்டம் தொடங்கப்படும் என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. இந்தத் திடத்தின் கீழ், அந்தக் குழந்தைகளின் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியைத் தொடர, மாதம் ரூ. 2,000 உதவித் தொகை வழங்கப்படும்.
மேலும், பள்ளிப் படிப்பு முடித்த பின்னர் கல்லூரிக் கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் அவா்களுக்கு வழங்க வழிவகை செய்யும். இந்த நிலையில், இந்தத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை, கலைவாணர் அரங்கத்தில் தொடக்கி வைத்து, குழந்தைகளுக்கு உதவித் தொகையை வழங்கினார். மேலும், பெற்றோர் இருவரையும் இழந்து பிளஸ் 2 வகுப்பு முடித்து, பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் தமிழக அரசின் முயற்சியால் சேர்க்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு மடிக்கணினிகளையும் வழங்கினார்.
திட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது., இன்றைக்கு, (நேற்று) தாயுமானவர் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்த அன்புக்கரங்கள் திட்டத்தைத் தொடங்கி வைத்திருக்கிறோம். இதனால், 6,082 குழந்தைகளுக்கு, மாதந்தோறும் இரண்டாயிரம் ரூபாய் வழங்கப் போகிறோம். இது என்ன, வாக்கரசியலுக்காக செய்வதா? காலையில் பள்ளிக்கு பசியுடன் வர குழந்தையின் வேதனையைப் பார்த்தேன். காலை உணவுத் திட்டத்தை உருவாக்கினேன். இன்றைக்கு, 21 இலட்சம் குழந்தைகளுக்கு நாள்தோறும் சூடாக, சுவையாக சத்தான உணவை பரிமாறுகிறோம்.
இது என்ன, வாக்கரசியலுக்காக செய்வதா? சமூகத்தின் விளிம்பு நிலையில், எண்ணிக்கையில் சில நூறு - சில ஆயிரம் மட்டுமே இருக்கின்ற மாற்றுத்திறனாளிகள் - திருநர்கள் ஆகியோருக்கும் பார்த்துப் பார்த்துத் திட்டங்களை செயல்படுத்துகிறோம். இது என்ன, வாக்கரசியலுக்காக செய்வதா? இன்னும் சொல்கிறேன்… நம்முடைய திராவிட மாடல் அரசு, என்ன மாதிரியான நெருக்கடியில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது என்று உங்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும்.
கொரோனா பெருந்தொற்று உச்சத்தில் இருந்த காலக்கட்டம் அது. ஏராளமான உயிர்கள் பறிபோனது. பலருடைய தொழில்கள் எல்லாம் முடங்கிப் போனது. பல குடும்பங்கள் தங்களுடைய முதுகெலும்பை இழந்து, பலவீனப்பட்டது. உடனே, இந்தியாவுக்கே முன்மாதிரி அரசாக, கொரோனாவால் பெற்றோரை இழந்த 15 ஆயிரத்து 775 குழந்தைகளுக்கு, 511 கோடியே 27 இலட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கினோம்.
இது என்ன, வாக்கரசியலுக்காக செய்வதா? இல்லை. கொரோனாவால் பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு மாதந்தோறும் மூவாயிரம் ரூபாய் என்று 2021-ல் ஆயிரத்து 148 குழந்தைகள் - 2022-ல் ஆயிரத்து 112 குழந்தைகள் - 2023-ல் ஆயிரத்து 12 குழந்தைகள் என்று, மூன்று ஆண்டுகளுக்கு நிதி உதவி வழங்கினோம். இது என்ன, வாக்கரசியலுக்காக செய்வதா? இல்லை. அரசு சேவை இல்லங்கள் மற்றும் அரசு குழந்தைகள் இல்லங்களில் தங்கியிருக்கின்ற ஆயிரத்து நானூறு பெண் குழந்தைகளுக்கு தற்காப்பு மற்றும் விளையாட்டுப் பயிற்சிகள் வழங்குகிறோம்.
இதென்ன, வாக்கரசியலுக்காக செய்வதா? இல்லை. சிறப்பு தத்தெடுப்பு நிறுவனங்களில் இருக்கின்ற ஊட்டசத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்க, அனைத்து சிறப்பு தத்தெடுப்பு நிறுவனங்களையும், தாய்ப்பால் வங்கியுடன் இணைத்திருக்கிறோம். இது என்ன, வாக்கரசியலுக்காக செய்வதா? இல்லை. இப்படி ஏராளமான திட்டங்களை, முன்னெடுப்புகளை எங்களால் பட்டியலிட்டு சொல்லிக் கொண்டே இருக்க முடியும். இதற்கும் வாக்கரசியலுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? வாக்கு என்பது, மக்களின் நம்பிக்கையை பெற்றதற்கான அடையாளம். அந்த நம்பிக்கையை பெறும், கொள்கையும், செயல்திட்டமும், உழைப்பும், எங்களிடம் இருக்கிறது.
அந்த நம்பிக்கையினால் பெறப்பட்டிருக்கும் இந்தப் பொறுப்பு, சமூகத்தின் கடைக்கோடி மனிதரையும் கை கொடுத்து மேலே தூக்கி விடுவதற்கான வாய்ப்பு. அந்தக் கையாகத்தான் என்னுடைய கை இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். அப்படிதான், இருந்து கொண்டிருக்கிறது. பெற்றோர் வேலைக்கு செல்கிறார்கள் என்று, குழந்தைகளுக்கு காலை உணவு வழங்குகிறோம். பெற்றோரே இல்லாத குழந்தைகளை, சிங்கிள் பேரண்ட் இருக்கின்ற குழந்தைகளை பார்த்துக் கொள்ள வேண்டுமே என்ற எண்ணம் வந்தது. அந்த அடிப்படையில் உருவானதுதான், இந்த அன்புக்கரங்கள் திட்டம்.
இந்தத் திட்டத்திற்காக, மாவட்ட ஆட்சியர்களிடம் சொல்லி, பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகள் - பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொருவரால் கைவிடப்பட்ட குழந்தைகள் - பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோர் மாற்றுத்திறனாளியாக இருப்பவரின் குழந்தைகள் - பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோர் சிறையில் இருந்தால், அவர்களுடைய குழந்தைகள் - பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோர் உயிருக்கு ஆபத்தான நோய்களுடன் வாழ்ந்து வருகிறார்கள் என்றால், அவர்களுடைய குழந்தைகள் என்று கணக்கெடுக்கச் சொன்னோம்.
அப்படி முதல்கட்டமாக கண்டறியப்பட்ட 6,082 குழந்தைகளுக்கும், பள்ளி படிப்பை முடிக்கின்ற வரைக்கும் இனிமேல் மாதந்தோறும் இரண்டாயிரம் ரூபாய் உங்கள் வங்கி கணக்கில் வரவு வைத்திடுவோம். உங்களுக்கு 18 வயது ஆகின்ற வரைக்கும், நீங்கள் கல்வியை தொடர இந்த உதவித்தொகை வழங்கப்படும். நீங்கள் பள்ளி படிப்பை முடித்த பிறகு, கல்லூரிக் கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் வழங்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். நீங்கள் எல்லோரும் படித்து முன்னேறி வரவேண்டும். இதுதான் என்னுடைய விருப்பம்; எங்களுடைய இலட்சியம். இந்த இலட்சியத்துக்கு துணையாகும் நம்முடைய திராவிட மாடல் அரசின் கரம்தான், அன்புக்கரம்.
நாளைக்கு நீங்கள் படித்து, டாக்டராக - என்ஜினியராக - சயிண்டிஸ்டாக - ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரியாக - அரசியல்வாதியாக உயர்ந்து, இந்தச் சமூகத்துக்கு, இந்த மக்களுக்கு சேவையாற்ற வேண்டும். உங்களுடைய வெற்றி, தமிழ்நாட்டின் ஹிஸ்ட்டரியை சொல்லவேண்டும். அதற்கு உங்களுக்கு சப்போர்ட்டாக, உங்கள் ஃபிரண்டாக, உங்கள் பேரண்ட்டாக, இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கிறேன்.. இருப்பேன். நன்றி. வணக்கம். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
தமிழகத்தில் இன்று முதல் வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
11 Mar 2026சென்னை, தமிழகத்தில் இன்று முதல் 15-ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும் என வானிலை
-
குடிமைப் பணி தேர்வில் தேர்ச்சி: 54 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
11 Mar 2026சென்னை, குடிமைப் பணி தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழகத்திலை சேர்ந்த 54 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
-
அடக்கம், மனிதநேயத்தையும் வளர்த்து கொள்ள வேண்டும்: யு.பி.எஸ்.சி. தமிழக வெற்றியாளர்களுக்கு முதல்வர் முதல்வர் ஸ்டாலின் அறிவுரை
11 Mar 2026சென்னை, உங்கள் பணியில் நாட்டைக் கவனித்தாலும் உங்கள் வீட்டையும் குடும்பத்தையும் அதே அக்கறையுடன் கவனித்துக்கொள்ள வேண்டும் என்று யு.பி.எஸ்.சி.
-
திருச்சி பஞ்சப்பூரில் மத்திய அரசு சார்பில் விழா; ரூ.5,650 கோடியில் புதிய திட்டங்கள்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
11 Mar 2026திருச்சி, திருச்சி பஞ்சப்பூரில் நடைபெற்ற மத்திய அரசின் விழாவில் சுமார் ரூ.5,650 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டினார்.
-
தமிழ்நாட்டில் நவீன, வலுவான மின்சார அமைப்பை உருவாக்க அரசு - கலிபோர்னியா பல்கலை., இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையழுத்து
11 Mar 2026சென்னை, தமிழ்நாட்டில் நவீன, வலுவான மற்றும் நிலைத்தன்மை கொண்ட மின்சார அமைப்பை உருவாக்க தமிழ்நாடு அரசு-கலிபோர்னியா பல்கலைக்கழகம் இடையே முதல்வர் மு.க.
-
எல்.பி.ஜி. சிலிண்டர் தட்டுப்பாடு: பார்லி.,யில் விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்
11 Mar 2026புதுடெல்லி, நாடு முழுவதும் எல்.பி.ஜி.
-
அரசுப்பள்ளியில் உணவு சாப்பிட்டு மயக்கமடைந்த பள்ளி மாணவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
11 Mar 2026கோவை, கோவை மாவட்டம் கவுண்டம்பாளையத்தில் உள்ள அரசுப்பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 43 மாணவ - மாணவியருக்கு வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்ட மாணவர்களுக்கு உரிய
-
தமிழ்நாட்டின் பொறுப்பு கவர்னராக ஆர்.வி.ஆர்லேகா் இன்று பதவியேற்பு
11 Mar 2026சென்னை, தமிழ்நாட்டின் பொறுப்பு கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.வி.ஆர்லேகா் இன்று பதவியேற்கவுள்ளார்.
-
ரூ.100 கோடியில் மின்சார, மின்னணு இணைப்பிகள் புதிய உற்பத்தி ஆலை முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஹிரோசே நிறுவனத்துடன் ஒப்பந்தம்
11 Mar 2026சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லியில் ரூ.100 கோடியில், 100 பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் அமையவுள்ள மின்சார / மின்னணு இணைப்பிகள் உற்பத்தி
-
போர் சூழல் காரணமாக மேற்காசியாவில் சிக்கி தவிக்கும் தமிழர்களை பாதுகாப்பாக தாயகம் அழைத்து வர நடவடிக்கை தேவை: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
11 Mar 2026சென்னை, மேற்காசியாவில் தவிக்கும் தமிழ்நாட்டு மக்களைப் பாதுகாப்பாகத் தாயகம் அழைத்து வருவதற்கான சிறப்பு விமானங்கள் உள்ளிட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என
-
ஹார்மூஸ் ஜலசந்தி அருகே ஈரானின் 16 கண்ணிவெடி படகுகளை தாக்கி அழித்தது அமெரிக்கா
11 Mar 2026வாஷிங்டன், ஹார்மூஸ் ஜலசந்தி அருகே ஈரானின் 16 கண்ணிவெடி படகுகளை அமெரிக்க படை அழித்தது.
-
கோடைக்காலத்தில் எரிவாயு தேவை கூடும் என்பதால் மின் நிலையங்களுக்கான எரிவாயு விநியோகத்தை உயர்த்த வேண்டும்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
11 Mar 2026சென்னை, மின் நிலையங்களுக்கான எரிவாயு விநியோகத்தைக் கடந்த 6 மாதங்களில் அவர்கள் பயன்படுத்திய அளவில் 65 சதவீதம் என நிர்ணயித்திருப்பதை மறுபரிசீலிக்க கோரி மத்திய பெட்ரோலியத்
-
காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு: மாவட்ட எஸ்.பி. நேரில் விசாரணை
11 Mar 2026காரைக்குடி, காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம் எம்.பி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசியது குறித்து சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் விசாரணை நடத்தி வருக
-
நவோதயா பள்ளிகளை எதிர்த்து வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல்
11 Mar 2026புதுடெல்லி, தமிழ்நாட்டில் ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் நிறுவ எதிர்ப்பு தெரிவித்த வழக்கில் தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
-
சட்டமன்ற தேர்தல் முடியும் வரை நேரில் ஆஜர் ஆக விலக்கு அளிக்க கோரி நீதிமன்றம் செல்கிறார் விஜய்
11 Mar 2026சென்னை, தேர்தல் முடியும் வரை டெல்லியில் சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜர் ஆக விலக்கு அளிக்க வேண்டும் என விஜய் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிகிறது.
-
தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது
11 Mar 2026தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் தமிழ்நாடு அரசு தேர்வுத்துறை இயக்ககத்தின் மூலம் நடைபெறும் 2025–2026 ஆம் கல்வியாண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு புதன்கிழமை (மார்
-
இன்றைய நாள் எப்படி?
11 Mar 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
11 Mar 2026- மன்னார்குடி ராஜகோபாலசுவாமி பஞ்சமுக அனுமார் மரஉறியில் ராமர் திருக்கோலமாய் காட்சி.
- ஸ்ரீபெரும்புதூர் மணவாள மாமுனிகள் புறப்பாடு.
- திருவாரூர் தியாகராஜர் பவனி.


