முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கில் க்யூட்டாக இருக்கிறார்

வியாழக்கிழமை, 18 ஜூலை 2024      விளையாட்டு
Subman-Gill 2023-09-06

Source: provided

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பிக்பாஸ் சீசன் 1 ஒன்றிலும் பங்குபெற்று பிரபலமானவர் பாலிவுட் சீரியல் நடிகை ரிதிமா பண்டிட். சில இணையத்தொடர்களிலும் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ஷுப்மன் கில்லை இந்தாண்டு டிசம்பரில் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியது. ஏற்கனவே இது குறித்து நடிகை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருந்தாலும் மீண்டும் இந்த சர்ச்சை எழுந்துள்ளது. ஏற்கனவே ஷுப்மன் கில், சச்சின் மகள் சாராவுடன் காதல் என சமூக வலைதளத்தில் வதந்திகள் கிளம்பியதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய ரிதுமா பண்டிட் இது குறித்து பேசியதாவது: நாங்கள் டேட்டிங் எதுவும் செய்யவில்லை. முதலில் எனக்கு ஷுப்மன் கில்லை தனிப்பட்ட முறையில் தெரியாது. நான் ஒருவேளை அவரை சந்தித்தால் நாங்கள் இது குறித்து பேசி சிரிப்போம். அவர் க்யூட்டாக இருக்கிறார். ஆனால், எங்களுக்குள் எதுவும் இல்லை. காலையில் இருந்து வாழ்த்து குறுஞ்செய்திகளும் தொலைப்பேசி அழைப்புகளுமாக வந்துகொண்டு உள்ளன. இது முற்றிலும் அபத்தமானது. நான் எதையும் மறைக்க விரும்புவதில்லை. எனது திருமணம் குறித்து நானே அறிவிப்பேன் என்றார்.

இஷான் கிஷனுக்கு வாழ்த்து

இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான இஷான் கிஷன் நேற்றஉ அவரது 26-வது பிறந்த நாளை கொண்டாடினார். இந்த நிலையில், இந்திய அணியின் சிக்ஸர் மன்னன் யுவராஜ் சிங் அவருக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக யுவராஜ் சிங் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: பிறந்தநாள் வாழ்த்துகள். 

இந்த சிறப்பான நாளை மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள். உங்களை இந்திய அணியில் விரைவில் பார்க்க ஆவலோடு காத்திருக்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட பிசிசிஐயின் மத்திய ஒப்பந்தத்தில் இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயரின் பெயர் இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது.

இளவரசி ஸ்மிருதி மந்தனா

மும்பையைச் சேர்ந்த ஸ்மிருதி மந்தனா இந்திய மகளிர் அணியில் தொடக்க வீராங்கனையாக களமிறங்குகிறார். இடது கை பேட்டரான இவர் இந்தியாவுக்கு டெஸ்ட்டில் 629 ரன்களும் 85 ஒருநாள் போட்டிகளில் 3,585 ரன்களும் டி20களில் 3,320 ரன்களும் எடுத்துள்ளார். ஆர்சிபி அணி இதுவரை விளையாடிய 17 வருட ஐபிஎல் வரலாற்றில் ஒருமுறைகூட வென்றதில்லை. ஆனால் மகளிர் பிரீமியர் லீக்கில் ஆர்சிபி அணி 2024 ஆம் ஆண்டு கோப்பையை வென்றது. ஆர்சிபி அணி வரலாற்றில் மகளிர் பிரிவில் முதன்முறையாக கோப்பையை வென்று அசத்தியது.

ஆர்சிபி மகளிர் அணிக்கு தலைமை தாங்கியவர் ஸ்மிருதி மந்தனா. இந்நிலையில், ஸ்மிருதி மந்தனாவின் 28ஆவது பிறந்தநாளில் ஆர்சிபி நிர்வாகம் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. அதில் இளவரசி மாதிரியான தோற்றத்தில் ஸ்மிருதி மந்தனா இருக்கிறார். இந்தப் போஸ்டர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

பாண்டியாவின் வைரல் பதிவு

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்று அசத்தியது. உலகக் கோப்பைத் தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட ஹார்திக் பாண்டியா, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தார். தென்னாப்பிரிக்க வீரர் க்ளாசனின் விக்கெட்டை பாண்டியா வீழ்த்தியது ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. மேலும் இறுது ஓவரினையும் ஹார்திக் பாண்டியா சிறப்பாக முடித்து கொடுத்தார். அதனால் இறுதியில் இந்திய அணி கோப்பையையும் கைப்பற்றியது.

இந்நிலையில் ஹார்திக் பாண்டியா தனது இன்ஸ்டா பக்கத்தில் 2023 உலகக் கோப்பையின்போது காயம் காரணமாக வெளியேறியபோது எடுத்த புகைப்படத்தினையும் டி20 உலகக் கோப்பைக்கு முன்பு எடுத்த புகைப்படத்தினையும் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், “ 2023 உலகக் கோப்பை காயத்திலிருந்து எனக்கு கடினமான பயணம்தான். ஆனால் அதனிடையில் நான் எடுத்த முயற்சிதான் டி20 உலகக் கோப்பை வெற்றிக்கு உதவியது. கடின உழைப்பு எப்போதும் கவனம் பெறாமல் போகாது. நாம் அனைவரும் நமது சிறந்த உழைப்பினை தர முயற்சிப்போம், உடல்நலத்திலும் கவனம் செலுத்துவோம்” எனக் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து