முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்: இந்தியாவுக்கு 82-வது இடம்

புதன்கிழமை, 24 ஜூலை 2024      உலகம்
Indian-passport 2024 07 24

Source: provided

லண்டன் : உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் இந்தியாவுக்கு 82-வது இடத்தை பிடித்துள்ளது.

லண்டனில் செயல்பட்டு வரும் ஹென்லி பாஸ்போர்ட் இண்டெக்ஸ் அமைப்பு உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. ஒரு நாட்டின் பாஸ்போர்ட் மூலம் எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம் என்பதன் அடிப்படையில் இந்த தரவரிசை நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில், 6 நாடுகள் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளன.

பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, ஸ்பெயின் மற்றும் ஜப்பான் ஆகியவை 2-வது இடத்தில் உள்ளன. இந்த நாடுகளின் பாஸ்போர்ட் மூலம் விசா இல்லாமல் 192 நாடுகளுக்கு பயணிக்கலாம் அல்லது அந்த நாடுகளுக்கு பயணித்து, அங்கு சென்று இறங்கியதும் விசா பெற்றுக்கொள்ளலாம். ஆஸ்திரியா, பின்லாந்து, அயர்லாந்து லக்செம்பர்க், நெதர்லாந்து, தென் கொரியா மற்றும் ஸ்வீடன் ஆகியவை 3-வது இடத்தில் உள்ளன. இந்த நாடுகளின் பாஸ்போர்ட் மூலம் விசா இல்லாமல் 191 நாடுகளுக்குப் பயணிக்கலாம்.

இந்த பட்டியலில், இந்தியா 82-வது இடத்தில் உள்ளது. செனகல் மற்றும் தஜிகிஸ்தான் ஆகியவையும் 82-வது இடத்தை இந்தியாவுடன் பகிர்ந்துள்ளன. இந்திய பாஸ்போர்ட்டை பயன்படுத்தி இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட 58 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து