முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேவாக், யுவராஜ் சிங், ரெய்னா மூவரில் ஒருவரை பஞ்சாப் அணியின் பயிற்சியாளராக நியமிக்க வாய்ப்பு

புதன்கிழமை, 24 ஜூலை 2024      விளையாட்டு
Sehwag 2024-05-17

Source: provided

சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளரான ட்ரெவர் பேலிஸ்-ன் இரண்டு ஆண்டு ஒப்பந்தம் முடிவடைந்துள்ளது. அவரை தொடர்ந்து நீட்டிக்க வாய்ப்பில்லாத நிலையில், வீரேந்தர் சேவாக், யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா ஆகியோரில் ஒருவரை பயிற்சியாளராக நியமிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வீரர்களின் எண்ணிக்கை... 

ஐபிஎல் 2025 அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு முன் மெகா ஏலம் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. இதில் ஒவ்வொரு அணிகளும் ரீ-டெய்ன் செய்வதற்கான வீரர்களின் எண்ணிக்கை குறித்து ஆலோசித்து வருகின்றனர். ஒவ்வொரு அணியும் நிறைய வீரர்களை கழற்றிவிட்டுள்ளனர். கேப்டன்கள் கூட சில அணிகளில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் வீரர்கள் மட்டுமின்றி பயிற்சியாளரை கூட சில அணிகள் மாற்ற செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

3 பேருக்கு வாய்ப்பு...

அந்த வகையில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளரான ட்ரெவர் பேலிஸ்-ன் இரண்டு ஆண்டு ஒப்பந்தம் முடிவடைந்துள்ளது. அவரை தொடர்ந்து நீட்டிக்க வாய்ப்பில்லை. அதனால் பஞ்சாப் அணி இந்திய முன்னாள் வீரர்களை பயிற்சியாளராக நியமிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக வீரேந்தர் சேவாக், யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா ஆகியோரில் ஒருவரை பயிற்சியாளராக நியமிக்க உள்ளதாக பஞ்சாப் அணி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதில் சேவாக், யுவராஜ் சிங் ஆகியோர் பஞ்சாப் அணிக்காக விளையாடி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து