முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மனுபாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி: ஜனாதிபதி, பிரதமர் மோடி வாழ்த்து

செவ்வாய்க்கிழமை, 30 ஜூலை 2024      இந்தியா      விளையாட்டு
Manu-Bhaker-2024-07-30

புதுடெல்லி, உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. துப்பாக்கி சுடுதலில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்பிஸ்டல் பிரிவில் மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் பெற்று இந்தியாவின் பதக்க கணக்கை தொடங்கினார்.

இதற்கிடையே, மனுபாக்கர்-சரப்ஜோத் சிங் ஜோடி நேற்று நடந்த வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் தென்கொரிய ஜோடியை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் பெற்று அசத்தியது. ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்துள்ள 2வது பதக்கம் இதுவாகும். இந்நிலையில், வெண்கலம் வென்ற மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஆகியோருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்புப் பிரிவில் வெண்கலம் வென்ற இந்தியாவின் மனு பாக்கர்- சரோப்ஜோத் இணைக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

எங்கள் துப்பாக்கி சுடும் வீரர்கள் தொடர்ந்து எங்களை பெருமைப்படுத்துகிறார்கள்! மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் ஒலிம்பிக்ஸில் 10மீ ஏர் பிஸ்டல் கலப்பு பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றதற்காக வாழ்த்துகள். இருவரும் சிறப்பான திறமையையும், குழுப்பணியையும் வெளிப்படுத்தியுள்ளனர். இந்தியா நம்பமுடியாத மகிழ்ச்சியில் உள்ளது. மானுவைப் பொறுத்தவரை, இது அவரது தொடர்ச்சியான இரண்டாவது ஒலிம்பிக் பதக்கம் ஆகும். இது அவரது நிலையான சிறப்பையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து