எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருவனந்தபுரம், நிலச்சரிவில் சிக்கி 8,000-க்கும் மேற்பட்டோர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர் என்றும் கேரளா பார்த்திராத நிகழ்வாக வயநாட்டில் பெரும் நிலச்சரிவு அரங்கேறியுள்ளதாகவும், நிவாரண முகாம்களில் 19 கர்ப்பிணி பெண்கள் உட்பட 8,017 பேர் தங்க வைக்கப்பட்டள்ளதாகவும் முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
கேரள மாநிலம், வயநாட்டில் பெய்த அதிகனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. நிலச்சரிவால், அட்டமலை, முண்டக்கை, சூரல்மலை ஆகிய பகுதிகள் முற்றிலும் உருகுலைந்து போயுள்ளன. அங்கு மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த பகுதிகள் முற்றிலும் சேறும், சகதியுமாகவும், இடிபாடுகள் நிறைந்ததாகவும் காணப்படுகிறது.
இந்தநிலையில், வயநாடு நிலச்சரிவு பாதிப்பு தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது., இதற்கு முன் கேரளா பார்த்திராத நிகழ்வாக வயநாட்டில் பெரும் நிலச்சரிவு அரங்கேறியுள்ளது. முண்டக்கை, சூரல் மலை போன்ற மலை கிராமங்களை காண முடியாத அளவு சேதம் அடைந்துள்ளன. அடுத்த 24 மணி நேரத்தில் அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அட்டமலை, சூரல்மலையில் முழுவீச்சில் மீட்புப்பணிகள், நிவாரணப்பணிகள் நடைபெறுகின்றன. உணவுப்பொருட்களை கொண்டு செல்ல கடற்படையின் உதவி கோரப்பட்டுள்ளது. கடலோர காவல் படையினர் உள்பட 1,257 பேர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
17 லாரிகள் மூலம் தேவையான உதவிப்பொருட்கள் சூரல்மலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் பிரேத பரிசோதனை வேகமாக நடைபெறுகிறது. நிலச்சரிவில் சிக்கி 8,000க்கும் மேற்பட்டோர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவில் சிக்கி 191 பேர் காணாமல்போய் உள்ளனர். மீட்கப்பட்ட 144 சடலங்களில் 76 ஆண்கள் மற்றும் 64 பெண்களும் உள்ளனர். மீட்கப்பட்ட சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.
பாதிக்கப்பட்ட மலைப்பகுதிகளில் மீட்பு குழுவினர் செல்ல தற்காலிக பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர்கள் முகாமிட்டுள்ளனர். மருத்துவ முகாம்களில் கூடுதல் டாக்டர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். சூரல் மலை பகுதியில் மின்விநியோகத்திற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. உறவுகளை இழந்தவர்களை மனரீதியாக தேற்றவேண்டியுள்ளது.
வயநாட்டில் உள்ள 82 நிவாரண முகாம்களில் 19 கர்ப்பிணி பெண்கள் உட்பட 8,017 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் கடந்த 48 மணி நேரத்தில் 572 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட 30 ம் தேதி மாலைதான் ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. நிலத்தின் அடியில் சிக்கியுள்ளவர்களை மீட்க மேஜர் ஜெனரல் எம்.இந்திரபாலன் குழுவின் உதவி கோரப்பட்டுள்ளது.
வயநாடு நிலச்சரிவு பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக கேரள மாநில அமைச்சர்களின் ஒரு மாத சம்பளம் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்கப்படுகிறது. நிவாரண நிதி மூலம் கேரளா அரசின் வரவு செலவுகளுக்கான கணக்கு இல்லை என்ற வதந்தி பரப்பப்படுகிறது. அதில் உண்மைகள் இல்லை, முதலமைச்சரின் பொது நிவாரண நிதி வெளிப்படையானது. வயநாடு பெரும் நிலச்சரிவு சம்பவம் தொடர்பாக நாளை (ஆகஸ்ட் 01) அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
மொஹரம் பண்டிகை: வரும் 7-ம் தேதி அரசு விடுமுறை என பரவும் தகவலுக்கு மறுப்பு
05 Jul 2025சென்னை, மொஹரம் பண்டிகை ஜூலை 6-ம் தேதிதான் என்றும், இந்தப் பண்டிகையை முன்னிட்டு ஜூலை 7, 2025 (திங்கட்கிழமை) அரசு விடுமுறை என்ற தகவல் தவறானது என்றும் தமிழக அரசின் உண்மை ச
-
தி.மு.க.வுக்கு ஆதரவு எப்படி? 3 தொகுதிகளின் நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
05 Jul 2025சென்னை, பட்டுக்கோட்டை, பாபநாசம், மணப்பாறை 3 சட்டப்பேரவை தொகுதிகளின் நிர்வாகிகளுடன் தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
-
அரசு மருத்துவ கல்லூரி டீன் நியமனம்: தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது ஐகோர்ட்
05 Jul 2025சென்னை, அரசு மருத்துவ கல்லூரி டீன் நியமனம் தொடர்பாக, தனி நீதிபதியின் உத்தரவை சென்னை ஐகோர்ட் உறுதி செய்துள்ளது.
-
அ.தி.மு.க. கூட்டணிக்கு வருமாறு விஜய்க்கு மறைமுக அழைப்பு விடுத்த எடப்பாடி பழனிசாமி
05 Jul 2025சென்னை, தி.மு.க. ஆட்சியை அகற்ற நினைப்பவர்களுடன் கூட்டணி அமைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
-
வரும் 8-ம் தேதி ராமதாஸ் தலைமையில் பா.ம.க. செயற்குழு கூட்டம்
05 Jul 2025திண்டிவனம், பா.ம.க. செயற்குழு கூட்டம் வரும் 8ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிப்பு
05 Jul 2025தர்மபுரி : ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தனை முன்னிட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் தங்கம்: தூத்துக்குடி மாணவிக்கு துணை முதல்வர் வாழ்த்து
05 Jul 2025சென்னை, சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்ற தூத்துக்குடி மாணவிக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 05-07-2025.
05 Jul 2025 -
புதிய வரி விகிதம் ஆகஸ்ட் 1 முதல் அமல்: 12 நாடுகளுக்கான வரி கடிதத்தில் கையெழுத்திட்டார் அதிபர் ட்ரம்ப்
05 Jul 2025வாஷிங்டன் : வரி விகிதம் தொடர்பாக 12 நாடுகளுக்கான கடிதத்தில் தான் கையெழுத்து இட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
விஜய் கட்சியிலிருந்து பிரசாந்த் கிஷோர் திடீர் விலகல்
05 Jul 2025சென்னை, விஜய் கட்சிக்கு தேர்தல் ஆலோசனை வழங்கும் பொறுப்பை ஏற்றிருந்த பிரசாந்த் கிஷோர், அதில் இருந்து விலகிக் கொண்டுள்ளார்.
-
தி.மு.க. ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு ஒரு மைல்கல்: அமைச்சர் சேகர்பாபு
05 Jul 2025சென்னை, திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு விழா தி.மு.க. ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு ஒரு மைல்கல் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
-
ஆயுர்வேத மருந்துகளுக்கு இறக்குமதி உரிமம் கட்டாயம்: சென்னை ஐகோர்ட்
05 Jul 2025சென்னை : ஆயுர்வேத மருந்துகளுக்கு இறக்குமதி உரிமம் கட்டாயம் பெற வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
உ.பி., யில் சோகம்: கல்லூரி சுவரில் கார் மோதி மணமகன் உட்பட 8 பேர் பலி
05 Jul 2025லக்னோ, உத்தரபிரதேச மாநிலத்தில் கல்லூரி வளாக சுவரில் கார் மோதிய விபத்தில் மணமகன் உட்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
இந்தித் திணிப்புக்கு எதிராக மத்திய பா.ஜ.க. அரசுக்கு மறக்க முடியாத பாடத்தை தமிழ்நாடு மீண்டும் கற்பிக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டம்
05 Jul 2025சென்னை, தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பா.ஜ.க. செய்துவரும் துரோகத்துக்கு பா.ஜ.க. பரிகாரம் தேட வேண்டும்.
-
போர்நிறுத்தம் குறித்து ஹமாஸின் அறிவிப்பால் மகிழ்ச்சி
05 Jul 2025டெல் அவிவ் : காஸாவில் போர்நிறுத்தம் குறித்த வரைவுக்கு பதிலளித்துள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
-
'தமிழ் மாநில பகுஜன் சமாஜ்' புதிய கட்சி தொடங்கினார் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்
05 Jul 2025சென்னை : தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய கட்சியை ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தொடங்கியுள்ளார்.
-
சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விதிமுறைகள் வெளியீடு
05 Jul 2025புதுடில்லி : 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இரண்டு முறை நடத்தப்படும் என சி.பி.எஸ்.இ. அறிவித்திருந்தது. அதற்கான தகுதி அளவுகோல் மற்றும் விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
-
காசாவில் 613 பாலஸ்தீனியர்கள் கொலை: ஐ.நா. குற்றச்சாட்டு
05 Jul 2025வாஷிங்டன் : கடந்த மே மாதத்தில் இருந்து காசாவில் நிவாரண உதவி பெற முயன்ற 613 பாலஸ்தீனியர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
-
சிறுமி பாலியல் வன்கொடுமை: இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு ஆயுள் தண்டனை
05 Jul 2025லண்டன் : இங்கிலாந்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு ஆயுள் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா மனு
05 Jul 2025சென்னை, போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.
-
கன்னடம் குறித்து கருத்து தெரிவிக்க கமலுக்கு தடை
05 Jul 2025பெங்களூரு, கன்னட மொழி குறித்து கருத்து தெரிவிக்க நடிகர் கமலுக்கு பெங்களூரு நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.
-
புத்தமத தலைவர் தலாய் லாமா 40 ஆண்டுகள் வாழ விருப்பம்
05 Jul 2025தர்மசாலா : சீனாவின் புத்தமத தலைவர் தலாய் லாமா இன்னும் 40 ஆணடுகளுக்கு மேல் வாழ ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்
-
வரும் 2026 சட்டசபை தேர்தலில் அதி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி உறுதி
05 Jul 2025சென்னை, 2026 தேர்தலில் அதி.மு.க. கூட்டணி வெற்றிபெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என அதி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
-
வங்கி மோசடி வழக்கு; நீரவ் மோடியின் சகோதரர் கைது
05 Jul 2025வாஷிங்டன் : பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி மோசடி செய்த நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.
-
தொடர் மழை, வெள்ளம்: அமெரிக்காவில் 13 பேர் பலி
05 Jul 2025நியூயார்க் : அமெரிக்காவில் தொடர் மழை வெள்ளத்தில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர்.