Idhayam Matrimony

லெபனானில் இருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு உத்தரவு

வியாழக்கிழமை, 1 ஆகஸ்ட் 2024      இந்தியா
Central-government 2021 12-

Source: provided

புதுடெல்லி: லெபனானில் உள்ள இந்தியர்கள் தொடர்பில் இருக்க வேண்டும் என்றும் அங்குள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.

ஹமாஸ் குழுவிற்கு ஆதரவு தெரிவிக்கும் லெபனானின் ஹிஸ்புல்லா குழுவிற்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலுக்கும், ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இடையே மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், லெபனானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேறுமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் லெபனானில் இருந்து வெளியேற முடியாத இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க மத்திய அரசு மற்றும் இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.

மேலும் லெபனானில் உள்ள இந்தியர்கள் தொடர்பில் இருக்க வேண்டும் என்றும் அங்குள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது. இதன்படி லெபனான் இந்திய தூதரகம் சார்பில் இந்திய நாட்டவர்களுக்கான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக லெபனான் இந்திய தூதரகம் தனது எக்ஸ் வலைதளத்தில், " பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள சமீபத்திய நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு, இந்திய மக்கள் மறு அறிவிப்பு வரும் வரை லெபனானுக்குப் பயணம் செய்வதை தவிர்க்க கடுமையாக அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அனைத்து இந்திய குடிமக்களும் லெபனானை விட்டு வெளியேறுமாறு கடுமையாக அறிவுறுத்தப்படுகிறார்கள். எக்காரணம் கொண்டும் தங்கியிருப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவும், தங்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும், பெய்ரூட்டில் உள்ள இந்திய தூதரகத்துடன் தங்கள் மின்னஞ்சல் ஐடி மூலம் தொடர்பில் இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்: தொடர்புக்கு: [email protected] அல்லது அவசர தொலைபேசி எண் +96176860128" என்று அதில் பதிவிடப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து